|
முந்தெதி
ரிக்கொத் தேதிவ ழங்கன் முகமாறா
வெந்திற லாண்மை நிராயுத னோடமர் வெஃகாமை
நொந்தவ ருக்குத வுந்திறன் மற்றின நூலோதும்
விந்தையு றும்புய வீரவி லக்கண விதியாமல்.
|
69 |
|
|
|
|
விற்றொழி
லாதிப டைக்கல வித்தைகள் வேறொன்றுங்
கற்றிலை யுத்தக ளத்திலும் வந்தெதிர் கால்வைத்தாய்
மற்றெது செய்குதி மற்கட வன்பிடி மானக்கை
பற்றிய கேடக மொன்றிறில் வளிபடு பஞ்சாவாய். |
70 |
|
|
|
|
என்றிவை
வஞ்சனை யாகவ ழிம்பனெ டுத்தோத
ஒன்றிய கேடக நெஞ்சுள டக்கியு ரத்தொல்லை
வென்றிகொண் மானத வெஞ்சிலை வாகைமி லைந்தேற்றி
நன்றறி வேதிய னாணொலி காட்டின னவையெஞ்ச. |
71 |
|
|
|
|
நாணொலி
விஞ்சலு நெஞ்சுது ணுக்கென நரஜீவர்
நீணிரை யச்சிறை யூடடை யச்செயு நீசப்பேய்
பேணிய கார்முக வெஞ்சர மாமழை பெய்தார்த்தான்
மாணொளி மங்கிம றைந்தது தாழ்மையின் வைப்பெங்கும்.
|
72 |
|
|
|
|
அக்கணம்
வேதிய னாரண மந்திர வழறோய்ந்த
செக்கர்பொ ரும்பக ழித்திர ளெய்துசெ றுத்தொல்லை
மைக்கரு வண்ணன்வி டுத்தச ரக்குவை மாய்வித்தான்
கக்கும ழைத்திரள் சிந்தம டுத்தெறி கால்போலே. |
73 |
|
|
|
|
நச்சர
விற்சின மீறிந ராந்தக னன்றென்னாக்
குச்சித மாயகொ டுஞ்சொன்மு கக்கணை கோத்தெய்யச்
சிச்சியெ னப்பொறி வாயில்செ றித்தொரு செயலின்றி
வச்சையி லானெதிர் நிற்கம றைந்தன வானோடி. |
74 |
|
|
|
|
நீசனி
னைந்துபல் சாபவ டிக்கணை நின்றேவ
ஆசியெ னுங்கணை வீசிய ழித்தன னறவோனும்
மூசிய பாசமு கக்கணை மூடன்மு னிந்தெய்ய
ஈசுர நேசச ரங்கொட றுத்தன னெதிரில்லான். |
75 |
|
|
|
|
பன்முக
மாகவி ரிந்தடு கோல்பல பைசாசன்
வின்முக நின்றுது ரந்திட வங்கவை வேதாந்த
உன்முக ஞானிவி டுத்தசி னக்குறி யூடாடிச்
சென்முக வெங்கணை யிற்சிதை வுற்றன தீந்தெல்லாம். |
76 |