|
எய்தகொ
டுங்கணை யெத்தனை கோடிக ளெல்லாமும்
வைதுகு றைத்தன னென்பதை யல்லது வரிவில்லாற்
கொய்துகு றைத்தன னென்பதெ னென்றுகொ டும்பேயன்
செய்திறம் யாதினி யென்றுதி கைத்தொரு தெளிவுற்றான்.
|
77 |
|
|
|
|
சத்திர
மாப்படை கொண்டிவ னோடே சமாராடுஞ்
சித்திரம் வெற்றித ரும்பரி சன்றது சீர்கேடாம்
அத்திர மாயவ ரும்படை கொண்டிங் கமராடிக்
குத்திர வாகைமி லைச்சுவ லென்று குறிக்கொண்டான். |
78 |
|
|
|
|
சுமையுறு
பொய்மைத் தூணியுண் மண்டித் தொகுமாறு
சமயமு கங்கொள் ளத்திரம் வாங்கித் தனுநாணிட்
டிமயமு தற்றக் கணம்வரை வென்ற திதுகாணென்
றமையவி டுத்தான் வஞ்சவ ழிம்ப வசுரேசன். |
79 |
|
|
|
|
வேறு.
|
|
|
விடுத்த
வெம்படை முகந்தொறும் பேய்க்குறி மிளிர்வ
கடுத்து றும்புழை விழிதொறுஞ் சினக்கனல் கஞல்வ
மடுத்த வாய்தொறும் புலைப்படு மொழிப்புகை மலிவ
வடுத்த ழைந்தமெய் மயிர்தொறுங் கூளிகள் வதிவ. |
80 |
|
|
|
|
மதங்கொ
டுன்முகந் தனித்தனி மாறுகொண் டடர்த்துக்
கதங்கொள் சீற்றமிக் கிகலுவ தத்தமிற் கறுவி
விதங்கொண் மாந்தரைச் சிற்றின்பப் படுகரில் விழுத்தி
வதங்கொ ளும்பழங் கதையெடுத் துயிர்கொளும் வலத்த. |
81 |
|
|
|
|
எண்டி
சாமுகத் தெமக்கெதி ரின்றெனச் செருக்குக்
கொண்டு நிந்தனைக் கொடுத்தழ லிறைப்பவீண்
குதர்க்கம் விண்டு மெய்ப்படு விளக்கொளி விளங்கில
தாக மண்டு பேரிரு டொடுப்பமன் பதைக்குல மருள. |
82 |
|
|
|
|
ஆய
விக்கொடும் படைக்கல மகங்கரித் துலம்பித்
தூய வேதிய னெஞ்சினுக் கெதிர்செலத் துளங்கான்
நாய காத்திரந் தொடுத்திது நாசமுற் றேக
மாய விப்படை சிதைத்திடு வேனென மதித்தான். |
83 |
|
|
|
|
ஏய
னும்பொழு தீசுரப் படைதொழு தெடுத்தான்
மாய மில்லதோர் மானத பூசனை வகுத்தான்
தீய விப்படை செகுத்தியென் றுள்ளுறை தெரித்தான்
மேய தூவரி விற்றொடை யாக்கினன் விட்டான். |
84 |