பக்கம் எண் :

303

  தொண்டன் விற்றொடை யாக்கிய சுருதியாத் திரமிவ்
வண்ட கோளகை யடுக்கழிந் தொழியினு மவியா
தெண்டி சைப்புவி யகத்திரு ளரிதர விரவி
மண்டி லம்மெனப் பொலிந்தது வானுற வயங்கி.
85
     
 

திவ்வி யாத்திரந் தேசொடு செறுத்தெதிர் வரக்கண்
டவ்வி யச்சம யாசுகம் வாய்மத மடங்கி
எவ்வ யிற்கரந் துறைதுமென் றேங்கியுள் ளுடைந்து
கௌவை யுற்றது முகங்களுங் கவிழ்ந்தன கருகி.

86
     
  புடைப ரந்தமெய் யொளியினாற் புகலிடம் பெறாதங்
கிடையு மாசுரப் பகழியை யெறுழ்வலிக் கலுழன்
அடையும் வெவ்விட நாகத்தை யாருயிர் குடித்தாங்
குடைய வன்படை யொருங்குயிர் குடித்ததவ் வொல்லை.
87
     
  மித்தை யாயதுன் முகப்படை விளிந்துநீ றாக
உத்த மாத்திரம் வேதியன றூணிபுக் கொடுங்கி
வித்த கச்சுடர் விரித்தினி தமர்ந்தமெய் வேத
சத்தி யத்தெதிர் நிற்குமோ புலைப்படு சமயம்.
88
     
  அலகை வீசிய வறுசம யச்சிலீ முகத்தை
இலகு திவ்வியாத் திரமென்ப ரியன்மதி யில்லார்
கலக மாயவை யொன்றையொன் றடர்ப்பது கண்டும்
உலக சிற்றின்ப போகத்தை யூட்டுவ துணர்ந்தும்.
89
     
  காசு ரம்பெறு காப்பியக் கவிஞர்கள் தீட்டும்
பரசு ரத்தெழுந் துலகிடைப் படுபுறச் சமய
ஆசு ரப்படை கோடிக ளடுப்பினு மவையெம்
ஈசு ரப்படை யாதித்தற் கெதிருமின் மினியாம்.
90
     
  குத்தி ரச்சம யாசுகந் தொலைந்தமை குறிக்கொண்
டெத்தி றம்மினி வாகைகொள் ளுவலென வெண்ணித்
தத்து வம்மசிப் பொருளெடுத் தகந்தையிற் சமைத்த
அத்து வைதமாம் படைதொடுத் தார்த்தன னழிம்பன்.
91
     
  சொல்ல ரும்பசும் பொன்னணிக் கிடையிடை துதைந்து
வில்லி டும்பல விதம்படு வெறுந்திருட் டாந்தக்
கல்ல ழுத்திய கலனிரை கவினுறப் புனைந்த
தல்லை யும்பக லாமருட் டுவதத்து வைதம்.
92