|
சித்த
விர்த்தியைக் கெடுப்பது தீநெறி யொழுகப்
புத்தி யைமயக் கிடுவது புவனகோ சரத்தை
மித்தை மித்தையென் றேய்ப்பது மெய்யுணர் விலாரைச்
சுத்த சூனிய கதியிடைக் கவிழ்ப்பதத் துவைதம். |
93 |
|
|
|
|
இனைய
தீப்படை யறவன்முன் செருக்கிவந் தெதிர
முனைவ னின்னருட் பலத்தினான் முனைமுகத் தூன்றி
வினைய மாகமெய் விதண்டவா தத்தொடை மிலைச்சிப்
புனையு மோர்வயி ராகதண் டங்கொடு புடைத்தான்.
|
94
|
|
|
|
|
தண்ட
வெள்ளிடி வீழ்தலுங் தலைமண்டை சிதறிக்
கொண்ட கொள்கையு மதவகங் காரமுங் குலைந்து
கண்ட கன்படை கரந்தது கானகந் துருவி
மண்டெ ரிக்குமுன் றருக்குமோ வறியபுன் பதரே. |
95 |
|
|
|
|
நாத்தி
கப்படை தொடுத்தனன் நராந்தக னலங்கொள்
ஆத்தி கப்படை தொடுத்துட னழித்தன னறவோன்
தீத்தி ரட்படு செங்கணான் பிடித்தவெஞ் சிலையிற்
கோத்த வத்திரம் யாவையும் வேதியன் குறைத்தான். |
96 |
|
|
|
|
சால
மார்தரு படைக்கலத் தொகுதிகள் சாம்பிப்
போலி யாயின யாதினிப் புரிகுவ லெனவிற்
கோலி வெஞ்சினக் கொடுந்தழற் பகழிகோத் தெய்தான்
நீலமே கஞ்செந் தழன்மழை பொழிந்தென நிருதன். |
97 |
|
|
|
|
செக்கர்
வானெனத் தீக்கணை வயின்றொறுஞ் செருமிப்
பக்க மெங்கணுந் தீந்துகப் படர்தலும் பனவன்
அக்க ரத்திரு மந்திரப் படைதொடுத் தவித்துந்
தொக்கு மேனியிற் சிற்சில சுடுகணை துதைந்த. |
98 |
|
|
|
|
கொள்ளி
யாரழற் சுடுகணை யாக்கையிற் குளிப்ப
ஒள்ளி யோன்சிறி தலமர லுற்றமை யோர்ந்து
துள்ளி யோடிவந் தெதிருறீஇ மல்லமர் தொடுத்துத்
தள்ளி வீழ்த்தின னிலனுற வழிம்பனாஞ் சழக்கன். |
99 |
|
|
|
|
ஆரி
யன்றளர்ந் தவனியிற் படிந்துமூச் சயர்ந்து
போரி யன்றில னாகவின் னேதலை புரட்டி
வீரி யம்பெறு வேன்வெற்றி யெனதென விளித்துப்
பூரி யன்கெடு புணர்ப்பினா லருகுறக் போந்தான். |
100 |