(பொ
- ரை) பிதா குமாரன் பரிசுத்தாவி என்னுந் திரித்துவமாகிய
முத்தலைச் சிகரியிலிருந்து உற்பத்தியான இந்த ஜீவகங்கையானது
வைதிகமாகிய குற்றமற்ற ஞானவுணவை விளைவித்து, உலகத்தவருக்கு
அதை ஊட்டி, பித்தளை உலகத்தைத் தூய்மை விளங்குகின்ற
பொன்னுலகமாக்கி உத்தமம் விளங்குகின்ற செம்மையான ஒழுக்கத்தை
இக்காலத்திலும் எக்காலத்திலும் உடையது.
|
ஒருநெறித் தாகித் தூய்தா யுள்ளுறத் தெளிந்து பாவத்
தரவன முறித்துச் சாடித் தருமச்செஞ் சாலி நீடப்
பெருவளம் படுத்து நித்ய பேரின்ப ஜலதி கூடும்
திருவுடைத் தாத லாலித் தீர்த்திகை சுருதி போலும். 5
|
(பொ
- ரை) ஒரே வழியையுடையதாய், தூய்மையானதாய், உள்ளும்
புறம்பும் தெளிவானதாய், பாவமாகிய விருக்ஷங்களை முறித்துத் தள்ளி,
தருமமாகிய சிறந்த நெற்பயிர் ஓங்க பெரிய வளத்தையுண்டாக்கிப்
பேரின்பமாகிய சாகரத்திற் செல்லும் நலத்தை யுடைத்தாயிருத்தலால்
இந்நதியானது வேதத்திற்கு ஒப்பாகும்.
|
தண்ணளி மருவி யான்ம தாரகத் துருவம் வாய்ந்து
விண்ணிழி புதுமை காட்டி விதிவரம் பொழுக்கம் பூண்டு
கண்ணகன் ஞால முய்யக் கனிந்துயி ரளித்துக் காத்துப்
புண்ணியன் கிருபை யேயாய்ப் பொலிந்தது ஜீவ வாரி. 6
|
(பொ
- ரை) குளிர்ந்த கிருபைபொருந்தி, ஆத்மமாவுக்கு
ஆதாரமாகிய உருவம் வாய்க்கப்பெற்று, பரலோகத்தினின்று இறங்கின
புதுமையைக் காட்டி, விதிவிலக்குளாகிய ஒழுக்கங்களுக்கு உட்பட்டு,
அகன்ற இடத்தையுடைய இப்பூவுலகமானது இரட்சிப்படையும் வண்ணம்
இரங்கி ஜீவனைக் கொடுத்துக் காப்பாற்றி, புண்ணிய மூர்த்தியின்
கிருபையைப்போல் விளங்கினது இந்த ஜீவநதி.
|
மானிட
ஜீவ தோட மலினத்தைக் கழுவித் தூய
போனக மாகித் தாகம் போக்குபா னமுமா யென்றும்
ஞானஜீ வனைவ ளர்த்து நற்கதிப் பயன்றந் துய்க்கும்
மாநுவேல் குருதி போலும் மானத ஜீவ கங்கை. 7
|
(பொ
- ரை) மானிடருடைய ஜீவதோஷமாகிய அழுக்கைக்
கழுவி, தானே தூய்மையான சாப்பாடாகி, தாகம்போக்கும் பானமுமாகி,
எப்போதும் ஞானஜீவனை வளர்த்து, நற்கதியாகிய பயனைத் தந்து,
இம்மானுவேலுடைய குருதியைப்போல இரட்சிக்கும் இந்த ஞான
ஜீவகங்கை.
|
வீற்றுவீற்
றாகிச் சென்றை வகைநில வேறு பாட்டை
மாற்றிநன் மருத வைப்பா வளம்படுத் தறத்தை யோம்பி
ஏற்றமுந் தாழ்வு மின்றா யெங்குமோர் சமமா யீண்டும்
ஆற்றல்சால் கடவுள் வேந்த னாணையைப் பொருவும் வாரி. 8
|
|