(பொ
- ரை) அநேக பிரிவுகளாகிச் சென்று, குறிஞ்சி முல்லை
மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்துவகையான நிலங்களின் வேறு
பாட்டை மாற்றி, அவை எல்லாவற்றையும் நல்ல மருத நிலங்களாக
வளப்படுத்தி, தருமத்தைப் பாதுகாத்து, ஏற்றமுந் தாழ்வுமில்லாமல், எங்கும்
ஒரே சமமாய், இவ்வுலகத்திலும் வல்லமையைப் பொருந்திய கடவுள்
வேந்தனுடைய ஆணைக்கு ஒப்பாகும் இந்நதி.
|
அற்புத ஜீவ
கங்கையாற்றிலே யகண்ட வானத்
துற்பவித் தூழி யூழி யுலவிநின் றெடுங்கித் தோன்றும்
பற்பல பேத மாய பகிரண்ட கோடி யெல்லாம்
பொற்புற மிதப்ப வேயாம் புற்புத சாலம் போன்றே. 9
|
(பொ
- ரை) விரிந்த வானலோகத்தி லுற்பவித்து ஊழி ஊழி
காலமாய் அசைவாடி நின்று ஒடுங்கித் தோன்றுகின்ற பற்பல பேதமாகிய
பகிரண்ட கோடிகளெல்லாம் அற்புதமயமாகிய ஜீவகங்காநதியிலே
நீர்க்குமிழிகளைப்போன்று அழகாக மிதப்பனவேயம்.
|
நிறைவளம் படுக்குந் தூய நித்திய ஜீவ கங்கை
துறைதொறும் பிரிந்து போந்து தொடுகுள மடுத்த டாகம்
குறைவற நிரப்பி யுண்மை குலவுநீண் மருத வைப்பின்
கறைதுடைத் திதய மென்னுங் கழனிபுக் களைந்த தன்றே. 10
|
(பொ
- ரை) நிறைந்த வளத்தையுண்டாக்கும் தூய நித்திய
ஜீவகங்கையானது துறைகடோறும் பிரிந்து பிரிந்துபோய், வெட்டப்பட்ட
மடுகுளம் தடாகம் என்னும் இவற்றைக் குறைவில்லாமல் நிரப்பி, உண்மை
பொருந்திய மருதநிலத்தின் களங்கத்தை நீக்கி, இதயமென்னும் வயல்
களிற்சென்று அவற்றைக் கலந்தது.
|
நீர்வளங் கண்டு கோமா நிலவளம் படுக்கு மாக்கள்
ஏர்வளம் பெறத்தி ருத்தி யிறைவனை வழுத்தி யேத்திச்
சீர்வளந் தருநல் வித்துத் தெளித்துநீர் பாய்ச்சி நாளும்
பார்வளம் பெறச்செஞ் சாலிப் பயிர்வளம் படுப்பார் மன்னோ. 11
|
(பொ
- ரை) நீர் வளத்தைக்கொண்டு அரசனுடைய நிலத்தின்
வளத்தை விர்த்திசெய்யும் மானிடர் எரினால் வளமுண்டாகும்படி நிலத்தை
திருத்தி, இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லி யேத்தி, செம்மையாகிய
வளத்தைத் தரத்தக்க நெல்விதைகளைத் தெளித்து, நீர்ப்பாய்ச்சி
எப்போதும் பூமி வளம்பெறும்படி சிறந்த நெற்பயிர் வளத்தை
உண்டாக்குவார்.
|
இருவகைப் பவத்தூ றோங்கி யிருண்டபே ரடவி முற்றும்
கருவறச் சுருதி யென்னுங் கட்கங்கொண் டெறிந்து போக்கித்
திருவளர் புனித நித்ய ஜீவநீர்க் கால்கொண் டுய்த்துப்
பொருவரு மருத வைப்பாப் புதுவல்பண் படுத்து வாரும். 12
|
|