(பொ
- ரை) ஜென்ம பாவம் கன்ம பாவம் என்னும் இரண்டு
வகையான பாவத்தூறுகள் ஓங்கி இருண்ட பெரிய காட்டை முற்றிலும்
வேரற வேதம் என்னும் வாள்கொண்டு வெட்டித் தள்ளி; நன்மைநிறைந்த
தூய்மையான நித்திய ஜீவநீர்க்கால்களைச் செலுத்தி, இணையற்ற மருத
நிலங்களாய்க் காட்டு நிலங்களைப் பண்படுத்துகின்றவர்களும்,
|
ஏர்விசு வாச மாக வெருதவா வூக்க மாகச்
சேர்நுகங் கடப்பா டாகச் செறிவடஞ் சிந்தை யாகக்
கூர்நுதிக் கொழுவெம் பெம்மான் றிருமொழிக் கூற தாகப்
பாரற வுழுது செய்கா லாக்கிமெய்ப் பணிசெய் வாரும். 13
|
(பொ
- ரை) விசுவாசமே ஏராகவும், அவா ஊக்கம் என்னும்
இரண்டும் எருதுக்களாகவும், கடமையே அவற்றைச் சேர்க்கும் நுகமாகவும்,
ஏக சிந்தையே அவற்றைக் கட்டுகின்ற வடமாகவும், எம்பெருமானுடைய
திருமொழியே கூரிய கொழுவாகவும் கொண்டு, பூமியை நன்றாய் உழுது,
செய்காலாக்கி, மெய்யான திருப்பணிவிடையைச் செய்கின்றவர்களும்;
|
குளங்கரை
பேணி ஜீவ நீர்குறிக் கொண்டுய்ப் பாரும்
வளங்கெழு மருத வைப்பா வறுநிலந் திருத்து வாரும்
விளங்குவித் தொளிரக் கண்டு மேலுற வளர்க்கின் றாரும்
இளங்களை கட்டு நீர்கால் யாத்தினி தோம்பு வாரும். 14
|
(பொ
- ரை) குளங்களையும் அவற்றின் கரைகளையும் பாதுகாத்து
ஜீவநீரை வேண்டிய இடத்தில் கொண்டு செலுத்துகின்றவர்களும், வரண்ட
நிலங்களை வளம்பொருந்திய மருதநிலமாகத் திருத்துகின்றவர்களும்,
விளங்குகின்ற வித்து முளைகிளம்பக் கண்டு அவற்றை மேலும் மேலும்
வளர்க்கின்றவர்களும், இளங் களைகளைப் பிடுங்கி நீர் கால்களை
உண்டாக்கி, அவற்றை இனிதாகக் காக்கின்றவர்களும்,
|
பழநறை
பருகிச் சிந்தை பரவச ராகிச் செய்ய
மழகளி றளைய மள்ளர் வான்முறை சுருதி கூட்டிக்
கொழுநிழல் வைகிக் கோமான் குணங்குறி விதந்து பேசி
எழுமிடற் றிசையிற் பாடி யிதயநெக் குருகு வாரும். 15
|
(பொ
- ரை) செம்மையாகிய இளம்யானைகளை யொத்த
மள்ளர்கள் பழைய தேனையுண்டு சிந்தை பரவசமாகி
விதிப்படிசுருதிகூட்டி, கொழுமையாகிய நிழலினிடத்தேயமர்ந்து,
எம்பெருமானுடைய குணங்களையும் திரு நாமங்களையும் மேன்மையாகப்
பேசி, மேலும் மேலும் எழும்பிக்கொண்டிருக்கிற தொண்டையோசையாற்
பாடி, இருதயம் நெகிழ்ந்துருகின்றவர்களுமாக,
|
மேவருந் திருநா டெங்கும் வித்தக வுழவர் வேலை
ஒவற விசுவா சத்தி னொண்கருப் பொதிந்து முற்றிக்
காவல னருளால் ஜீவ மணிக்கதிர் கஞலி யீன்று
தாவில்பே ரின்ப போகம் விளைப்பது தருமச் சாலி. 16
|
|