பக்கம் எண் :

306

  கழுதின் வன்றலை நசுக்கிய கழற்றுணை கருதித்
தொழுது பன்முறை தோத்திர கீதமும் பாடி
எழுது சீர்த்தியான் ஜெபித்தன னாகமற் றெனக்குள்
முழுதுங் காணிய வாசைவந் தீர்த்தது முடுகி.
109
                 அழிம்பன் றோல்விப் படலம் முற்றிற்று
     
                    ___________
 
     
 
மரணச் சூழலிறுத்த படலம்
 
 
     
  கானகத் தெதிர்ந்த நீசக் கள்வனைப் புறங்கண் டூர்த்த
வானகத் தரசற் போற்றி வண்டழை கொண்டு வாளி
ஊனகத் துடன்ற காய மொருங்கற வகற்றி ஜீவ
போனக ஞான பானந் துய்த்தனன் புலமை மிக்கான்.
1
     
  உண்டிளைப் பாறி யொல்லை யொளிகொள்பட் டயத்தை யேந்திக்
கண்டக வழிம்ப னின்னுங் கைகலந் திடுவ னேனும்
அண்டர்நா யகனுண் டென்னா வவலமின் றாக வன்பிற்
றெண்டனிட் டிறைஞ்சி வாழ்த்தி ஜீவபா தையிலே சென்றான்.
2
     
  முன்னுறக் கருதி நோக்கி முடுகுவ னெறியைப் பற்றிப்
பின்னுறத் திருமி நோக்கிப் பேருயிர்ப் பெறிவன் பேதுற்
றென்னுறப் படுவ தேயோ வின்னுமென் றிடைவன் கானிற்
பொன்னுறப் பொதித்து செல்லுந் தனிவழிப் போக்கன்போல்வான்.
3
     
  ஓடுவ னோடி யெய்ப்புற் றுலவுவன் விரைந்து முன்பின்
நாடுவன் வெருண்டு நின்று நலிகுவ னம்பன் சீர்த்தி
பாடுவன் றுதிப்பன் கிட்டிப் பதாம்புஜம் பணிந்து சென்னி
சூடுவன் றுணிந்து செல்வன் சுருதிநூ னெறிவி டாதே.
4
     
  இப்பரி சாகச் சின்னா ளேதமின் மறைவ லாளன்
ஒப்பருந் தாழ்மை வைப்பை யூடறுத் துருவி யேகிச்
செப்பரு மரண வாதைப் படுகரைச் சென்று சேர்ந்தான்
குப்புறீஇ விழுந்தான் வெய்யோன் குடதிசைக் குன்றி லேறி.
5
     
  அஞ்சுறு மரண வைப்பை யடுத்தலு மலறி யேங்கி
எஞ்சியோ ரிருவ ரோடி யெதிர்வரக் கண்டு நீரிச்
சஞ்சல மடைதற் கென்னோ சம்பவ மெதிர்ந்த தென்றான்
உஞ்சிடு மாறெம் மோடு திருமுகென் றுரைப்ப தானார்.
6