|
சீரிய
சீயோ னென்னுந் திவ்விய கிரியின் சாரல்
காரிருட் பிழம்பொன் றேயோ கடுவிடப் பாந்தள் துற்றி
மாரணப் படுக ரெங்கும் வரம்பில்பேய்க் கணங்கண் மல்கிப்
பேரிடி முழக்க மெஞ்சப் பளிறிநின் றுரறு மாதோ. |
8 |
|
|
|
|
அதரிரு
மருங்குங் கிட்டி யாழ்படுங் குழிக்குண் மேய
சிதடர்வல் விலங்கு பூண்டு திகிலுறீஇக் கலங்கி மாழ்கிப்
பதறிநெட் டுயிர்ப்பு வீங்கிப் பதைபதைத் தலறி யேங்கிக்
கதறியங் குழலுங் காட்சி யாதெனக் கழறு கிற்பேம். |
9 |
|
|
|
|
மன்றலங்
கிரியின் சாரன் மழைமுகி றுவன்றி யெங்குந்
துன்றிருள் பரத்த லாலே விழிப்புலந் துருவி டாதால்
கொன்றுழன் மரணம் பொங்கிக் கொடுஞ்சிறைவிரித்துப்போர்த்துச்
சென்றுநின் றகவு மாங்கே யாரதை ஜெயிக்கு மீட்டார்.
|
10
|
` |
|
|
|
முன்னையோ
ரடிபெ யர்ப்பின் மோசத்தின் முழுகிப் போவேம்
பின்னையே திருமி யாவி பிழைத்திங்ஙன் வருவே மல்லேம்
நின்னையுங் காணுகில்லே நிகழ்பரி சுணர்த்து கில்லேம்
என்னையே நிற்றி தாழா தெம்மொடு திருமு கென்றார். |
11 |
|
|
|
|
என்றலு
மறைவ லாள னெம்பிரா னகர்சென் மார்க்கம்
ஒன்றிதை யொருவு வோருக் குய்விலை யுண்மை தேரின்
இன்றொடு முடிவ தாய விடரினுக் கலசி யோடித்
துன்றிரு ணிரையத் தென்றுந் துடிப்பதோ சூழ்ச்சி யென்றான். |
12 |
|
|
|
|
நன்றுநன்
றுனது சிந்தை நாடிய படிசெ யாங்கள்
பொன்றிடத் துணியே நின்சொற் புத்தியு நீயு மாமுன்
சென்றறிந் திடுக வெங்கள் தெருளுரை யென்று நெஞ்சங்
கன்றிய விருவ ரோடிக் கலந்தன ரழிம்ப னாட்டில். |
13 |
|
|
|
|
வெருவியோர்
வெந்நிட் டேக வித்தகன் முன்னிட் டேகி
மருவினன் றமிய னாக மாதுளத் தெழுந்த பாவக்
கருவினின் றோங்கி மாயக் கருந்தழைக் காடு மல்கிப்
பருவரல் பழுத்துத் தூங்கும் மாரணப் படுகர் வைப்பை. |
14
|