|
செற்றமில்
குணத்தா னந்திச் செக்கர்வான் மருண்டு கங்குல்
உற்றுழி யடுத்தா னாக வுள்ளுளே கவன்று நோக்கி மற்றிதே
போலுங் கேட்ட மாரணப் படுக ரென்று
சற்றுளந் திகைத்து நின்று தன்னுளே கவல்வ தானான்.
|
15 |
|
|
|
|
பாபத்தின்
றிரளோ வந்த காரத்தின் பரப்போ தேவ
சாபத்தின் செறிவோ மாய சாலத்தின் சமைவோ நித்ய
கோபத்தின் மலிவோ ஞான நாசத்தின் குவிவோ மோச
ஆபத்தின் குகையோ வந்தத் தாரிருட் படல மம்மா. |
16 |
|
|
|
|
பூருவந்
தொடங்கி யூழி புடைபெயர் காலங் காறும்
பாரகங் கெழுமு ஜீவப் பகுதிக டம்மை யெல்லாம்
வாரிவாய் மடுக்கு மீண்டோர் மாரணப் படுக ருண்டென்
றூரவ ருரைக்கக் கேட்ட துண்டியான் கண்ட தின்றால். |
17 |
|
|
|
|
பொறியெலா
மருளு மாலைம் புலனெலாம் புதையு மானன்
னெறியெலாம் பிசகு மாலென் னினைவெலாம் புரளு மால்விண்
குறியெலாங் குழம்பு மாலென் குணனெலா மழுங்கு மான்மெய்
அறிவெலா மடங்கு மாலென் னாருயி ரகலுங் கொல்லோ. |
18 |
|
|
|
|
ஆவியே
யகலு மேனு மாரருட் கிறிஸ்து வேயென்
ஜீவனுந் தேக பந்தந் தீர்ப்பதற் கியல்வ தாய
சாவுமூ தியமா மென்னச் சமைந்துள விசுவா சத்தின்
மேவரு தைரி யந்தா னுடலொடு விளிவ தேயோ.
|
19 |
|
|
|
|
கொந்தழ
லனைய துன்பங் குவைகுவை யாக வென்மேல்
வந்துவந் தடர்க்கு மேனு மகத்துவ கருணை வெள்ளம்
உந்திமே லிடுமற் றென்னா வுள்ளுளே யூக்கந் தோன்றி
மந்திர வாள்கைக் கொண்டு மரணவைப் பூடு செல்வான். |
20 |
|
|
|
|
பட்டய
வொளியிற் பக்கம் பார்த்தருட் பாதை பற்றி
உட்டெளி வொடுகா லூன்றி யுரத்தடி பெயர்த்து நின்று
துட்டவல் விலங்கு காளி கூளிக டொகுமக் காட்டுள்
கிட்டனோர் தமிய னாக மென்மெலச் செல்லுங் காலை. |
21 |
|
|
|
|
பூவல
யத்து நீசப் புலையநு போகந் துய்த்து
ஜீவநாட் கழித்துச் சிந்தை திருகியே சிதட ராகித்
தாவரு நொதிக்குள் வீழ்ந்து தத்தளித் துயிர்ப்பு முட்டி
ஆவலங் கொட்டி வாய்விட் டழுதழு தவலிப் பாரை. |
22 |