|
உள்ளநாண்
முழுது மொல்கா துலகின்ப நுகர்ந்து கூற்றங்
கொள்ளுநாண முத்தி வேட்டுக்குரைப்பதெனபயன் கொண்டென்னா
எள்ளரும் ஜீவ சாக்ஷி யிடித்திடித் துடற்ற
நொந்து விள்ளரும் பிராண தாப வேதனை யுழக்கின் றாரை. |
31
|
|
|
|
|
நித்திய
ஜீவ மார்க்க நிண்ணயந் தெரிந்தோர் தம்மைப்
பித்தரென் றிகழ்ந்து தேவ தூஷணம் பிதற்றி வேத
சத்திய விரோதி யாகிச் சமைத்ததீ வினையை யுள்ளி
மத்திடு தயிரே போல மறுகியுள் ளுடைகின் றாரை. |
32 |
|
|
|
|
தந்தைதாய்
பெண்டு பிள்ளை தமாபரி ஜனரெல் லாரும்
இந்தனச் சடங்குக் காவ தியற்றுவா ரீசன் கோபஞ்
செந்தழ லிறைக்கும் யாண்டும் புகலிலை ஜீவ னேயென்
றந்தர நோக்கி நோக்கி யகங்குலைந் தயர்கின் றாரை. |
33 |
|
|
|
|
நோக்கரு
மவநம் பிக்கை நொதிப்படு கிடங்கர் வீழ்ந்து
சாக்கிடை யாகிக் கூளி தலையெடா தமிழ்த்த வாற்றா
தேக்கமுற் றூழி யூழி யிருட்சிறைத் துயரை யெண்ணி
ஆக்கையி னிலைதள் ளாடி யலமர லுறுகின் றாரை. |
34 |
|
|
|
|
கள்ளுண்டு
களித்துங் காமக் கடுவிட நுகர்ந்தும் வாயால்
எள்ளுண்ட பிணியுண் டாகி யிடருண்டு தவிப்புண் டியாக்கை
துள்ளுண்டு துடித்து வாணா டொலையுண்டு மலங்கி யாவி
அள்ளுண்டே மள்ளுண் டேமன் றாருயிர்ப் படங்கு வாரை. |
35 |
|
|
|
|
சலங்கொடு
பிசாச வர்க்கந் தனித்தனி வெருட்டிச் சார
விலங்கினம் வெகுண்டு பீறும் வேட்கையி னெதிர நாகக்
குலங்கள்வந் தடர்ந்து சீறிக் கொத்துவான் வளைந்து கொள்ளக்
கலங்கிநெஞ் சழிந்து சோர்ந்து கதழெரிக் கவிழ்கின் றாரை. |
36 |
|
|
|
|
கண்டுகண்
டுருகிக் கண்ணீர் களகள வடிப்ப னச்சங்
கொண்டுள நடுங்கி யாவி குலைகுவன் குமார வள்ளல்
உண்டெனக் கென்று நீங்கா வொருதுணை யென்ன வுன்னித்
தெண்டனிட் டிறைஞ்சி நிற்பன் றேறுவன் றெளிவு தோன்ற. |
37 |
|
|
|
|
காலடி
பெயர்க்கும் போது கலங்குவன் கலங்கிப் பாதை
மேலடி யூன்றும் போது விமலனைத் துதிப்பன் மீண்டும்
மாலிடைப் படுவ னீண்டோர் மயிர்க்கிடை விலகு மேனுங்
கோலிய படுக ரூடு குப்புற வருங்கொ லென்னா. |
38
|