|
நித்திய
ஜீவா னந்த நின்மல போகந் துய்க்கும்
முத்திவீட் டாசை பற்றி முன்னர்நின் றிழுக்க மூண்ட
உத்தம பத்தி பின்னின் றுந்திட வொளிகொள் வேத
சத்திய நெறிதி கழ்த்தத் தடம்பிற ழாது செல்வான்.
|
47
|
|
|
|
|
காரிரு
ணிறைந்த கானிற் கங்குலி னள்ளி ராவிற்
பாரிட நிறைந்த சாவிவன் பயங்கரப் படுகர் வைப்பில்
ஓரடித் தடத்தை நாடி யொருதனி யேக வென்னின்
ஆரிதற் கருக ராவா ரருட்பல முடையா ரன்றி.
|
48
|
|
|
|
|
துருவிநூ
னெறியிற் செல்லும் வேதியன் றுணுக்குற் றேங்க
மருவிவெங் கான மெங்கு மெதிரொலி மடுத்து மல்கக்
கருவிளை மகளிர் கர்ப்பங் கலங்கிட வலகைக் கூட்டம்
பெருவலித் திரடோள் கொட்டி யார்த்தன பிலத்துப் போந்து. |
49 |
|
|
|
|
மீயுயர்
மூக்குங் கண்ணும் வியன்பகு வாயு மண்டிக்
காயெரி தழுவிச் சுற்றக் கதழ்ந்துபேய்க் கணங்க டொக்குப்
பாயிரம் பலவுங் கூறிப் பகைச்சினந் திருகி வல்லே
ஆயிர முகங்க ளாகச் செருக்கிவந் தடர்ந்த மாதோ. |
50 |
|
|
|
|
மிடுக்குறு
பைசா சங்கள் வெருட்டுபு வெகுண்டு கிட்டிக்
கடுக்கிவந் தடையக் கண்டுங் கதித்தபே ரிரைச்சல் கேட்டுங்
கெடுக்குமுப் பகையை வென்று கேவல நாடிப் போகுந்
தடுக்கரும் வலத்தா னின்று தன்னுளே கவல்வ தானான். |
51 |
|
|
|
|
நீசனே
னாச தேச நீறுபட் டிடுமென் றஞ்சி
ஈசனார் நகரம் வேண்டீண் டெய்தினே னழிம்பன் மட்டில்
மூசிய விடுக்கண் டுன்ப முழுதுமோ ரணுவா மிந்த
நாசவைப் பெதிரு மோச நாசங்கள் பிறங்க லாமால். |
52 |
|
|
|
|
விரவிய
விவித மான விக்கினங் களைமேற் கொண்டு
புரவுநூ னெறியிற் பாதி போக்கினேன் புதுமை யாகக்
கரவுறு மரண வைப்பைக் கலந்திது காறும் வந்தேன்
இரவுழல் கிருத்தி மங்கட் கிரையமை வதற்கென் றேயோ. |
53 |
|
|
|
|
வெய்யபேய்க்
கணத்துக் கஞ்சி வெந்நிடி னோன்பு வீணாம்
வையக நகைக்குந் தூய மனக்கரி வதைக்குங் கேடு
கையதா முன்னிட் டேகி யாருயிர் கழியு மேனும்
மெய்யதா நித்ய ஜீவ வீட்டின்பம் யாவு நன்றாம். |
54 |