|
சதாநியங்
கிறிஸ்தி யேசு சரணபங் கயத்துக் கன்பன்
பதாநிய மத்தன் வேத வியனெறி கற்று வல்ல
விதானக னுலக பாசம் வீசிய விரத்தி யெங்கும்
நிதானியென் றுரைக்கு நாம நிலவுதற் குரிய நீரான்.
|
63 |
|
|
|
|
தற்பயந்
தினைய தக்கோன் றனிவழி துருவித் தானே
முற்பட முடுகுங் காலை முறையறி ஜீவன் முத்தன்
பிற்பட முடுகிக் கூவக் கேட்டுமோர் மாற்றம் பேசான்
சற்பனை யிதுமற் றென்னா விரைந்தனன் றன்னைப் பேணி. |
64 |
|
|
|
|
பருவரல்
தொடுத்த சாவின் பயங்கரப் படுகர் நீந்தித்
திருவரு ளுய்யக் கொண்ட செல்வனோர் திடர்வந் துற்றான்
மருவுமந் நிசியிற் றொக்க மையிருட் கடலை நீந்தி
உருவெளி திகழ்த்தி வெய்யோ னுதயமால் வரைவந் துற்றான். |
65 |
|
|
|
|
நைவரு
மரணோ பாதி நனிதொகும் படுகர் வைப்பிற்
கைவரு கலக்க நீங்கிக் கருதுநூ னெறிதி கழத்துந்
தைவிக வருளே போல தமப்பிழம் பிரிய நூறி
உய்வளித் தருக்கன் கீழ்பா லுதித்தனன் னொளியை வீசி. |
66 |
|
|
|
|
கண்டன
னுதயத் தோற்ற மென்பதென் ககனத் தூடே
செண்டெனச் சுழன்று நீங்காத் தெருமர லுழந்து தேய்வுற்
றுண்டுகொ லினிமற் றிங்கே யுறையுளென் றூசலாடும்
எண்டகு முயிரைத் தொண்ட னெதிர்ந்தன னென்ப தல்லால். |
67 |
|
|
|
|
அலகிலா
மரணோ பாதி யாழியின் கரையைக் கண்டாங்
குலகெலாந் திகழத் தோன்று முதயத்தி னொளியைக் கண்டான்
விலகரு நாச மோசம் விலக்கியன் றிரவு காத்த
இலகுபே ரருளை யெண்ணி யெண்ணியஞ் சலித்தா னேத்தி. |
68 |
|
|
|
|
இருள்புலர்
காலை வானாட் டிறைவனைப் பரவி யுள்ளந்
தெருளுறீஇத் தான்வந் துற்ற திடர்நின்று திருமி நோக்கி
வெருளுறு மிரவிற் றொக்க வெவ்விடர்ப் படுகர் முற்றும்
மருளறக் கண்டு கண்டு மலங்கினான் மறந்தான் றன்னை. |
69 |
|
|
|
|
தேறின
னுயிர்தந் துய்த்த திருவுளச் செயலைச் சிந்தித்
தாறினன் பிராண தாப மருட்டுணை யுரத்துப் பற்றி
வேறினிக் காலந் தாழ்த்தன் மிகுபிழை யென்று வல்லே
தூறடர் மரண வைப்பின் சூழலைத் துருவிப் போனான். |
70 |