பக்கம் எண் :

316

  வன்புறு மரண வைப்பை யகன்றபின் மறைவ லாளன்
முன்புசென் னிதான னட்பை முயலுவா னாட்டம் வைத்தான்
மன்பதை யுலகி லாவி வதைபடு வறுமை யாதி
துன்புறழ்ந் தவர்க்கே யன்றோ தோன்றுநன் னிதான புத்தி.
79
     
 
                   மரணச் சூழலிறுத்த படலம் முற்றிற்று.
 
     
 
நிதானி நட்புப் படலம்
 
 
     
  மெய்யா ரணவித் தகன்வெவ் விடர்சால்
மையார் மரணா டவிவைப் பையொரீஇ
மொய்யா ரளியின் னிசைமுற் றியவோர்
உய்யா னவனாந் தரமுற் றனனால்.
1
     
  வானா டிவரும் பிரயா ணிகடாங்
கானா டியமெய் வழிகண் டறியக்
கோனா டியமைத் தசெய்குன் றிவரா
நூனா டியவே தியனோக் கினன்முன்.
2
     
  நேரா றுபிடித் துநிதா னியெனும்
பேரா ளனெறிப் படுபெற் றிதனைக்
கூரார் விழிகொண் டுகுணித் தணுகிச்
சீரா ளனடுத் திதுசெப் புவனால்.
3
     
  அருமைத் துணையே யிவ்வரோ கவனத்
தொருமித் துவழித் துணையுற் றியையத்
தருமக் கிருபா கரர்தந் தவருட்
பெருமைப் பிரசா தநலம் பெரிதே.
4
     
  நம்மா வியுமாக் கையுநம் பொருளும்
அம்மா னடிக்கர்ப் பணமாக் கிடினுங்
கைம்மா றுகவா துகசிந் தவருட்
கிம்மா றணுவே னுமொரீ டுகொலாம்.
5
     
  என்றின் னனவோ கையொடீ சனருள்
நன்றுன் னிவழுத் தலுநன் றிதெனா
நின்றுன் னிநிதா னனுநெஞ் சமகிழ்ந்
தின்றுன் றுணைவாய்த் ததெனக் கெளிதோ.
6