பக்கம் எண் :

317

  என்றே வழிநா டினனென் குடிவிட்
டன்றே விழைவுற் றுனருந் துணையை
இன்றே வரைநா டினனெய் துகிலேன்
நன்றே யிவணேர்ந் ததுநா னுனையே.
7
     
  அருளே யெனையிவ் வழியாக் கியெனக்
கருளே யுனருந் துணையாக் கியதால்
அருளே துணைமுற் றுநம்மா ருயிருக்
கருளே யலதொன் றிலையா தரவே.
8
     
  புத்திக் கொருபோ தகதந் தையிறை
பத்திக் கொருபா லனைர க்ஷணிய
சித்திக் கொருநற் குருதே சிகன்வான்
முத்திக் குவழித் துணைமுற் றிலுநீ.
9
     
  என்னா வுனைநட் டனனெம் பெருமான்
பொன்னார் கழனீ ழல்பொருந் தும்வரை
முன்னா டுதுமா ரணமுந் துகெனாச்
சொன்னான் விநயத் தொடுசூழ்ச் சியனே.
10
     
  வல்லார் திருவுள் ளமகிழ்ந் தபடி
எல்லா நலமா குகவில் லொருவி
நல்லா யிவ்வழிப் படுநாண் முதலாச்
சொல்லாய் வரலா றுதொடுத் தெனவே.
11
     
                  வேறு  
     
  உளமலி யுவகையி னொருங்கு கேளென
வளமலி யாரணக் கிழவ வானுலைக்
களமலி கனன்மழை கவிழ்ப்பக் காசினித்
தளமலி சராசரஞ் சாம்ப ராமெனா.
12
     
  நாசதே சத்தவ ரெவரு நாடொறும்
பேசின ராயினும் பிழைப்பை நாடிலர்
மோசநா சத்திலே முழுகி டாவகை
ஈசனா ரருளெனை யிழுத்த திவ்வழி.
13
     
  விதிவழிப் பட்டனன் விசால வெள்ளிடை
நொதிவழி யுறாவகை நுனித்து வந்தியான்
கதிவழிக் கடைத்தலை யடுக்குங் காலையிற்
சதிவழி புகுத்துமோர் தையல் தோன்றினாள்.
14