|
முச்சக
மருண்மதி முகத்தள் மோகன
நச்சுவேற் கருங்கணி நறைவ டித்தென
இச்சக மொழியினி திசைக்கு மேந்திழை
அச்சநுண் மருங்குலா ளலகைக் கோர்துணை.
|
15 |
|
|
|
|
கேடெலா
மொருவழித் திரண்டு கேழ்கிளர்
பீடுசா லுருவமைந் துழலும் பெய்வளை
நாடியுண் ணினைப்பினுங் கொல்லு நஞ்சமிக்
காடவ ருயிர்ச்சுவை யறிந்த கூற்றரோ. |
16 |
|
|
|
|
நாமமோ
காதுரி யெனந விற்றுமக்
காமினி மயற்படு கண்ணி குத்திவந்
தேமநூ னெறியிகந் தெனது மஞ்சமுன்
சேமவைப் பாக்கொளிற் செல்வர் நின்னில்யார். |
17 |
|
|
|
|
புவிபடு
சிற்றின்ப போக போக்கியங்
குவிபடு மாளிகை குலவிவ யென்னொடுந்
துவிபடா திளநலந் துய்த்தி யாலுயிர்
அவிபடு காறுமென் றடுத்துக் கூறினாள். |
18 |
|
|
|
|
காதகி
பகட்டிய கபட்டு நச்சுரை
ஈதிதென் றெடுத்தியா னிசைப்ப தும்மதைக்
கேதமில் குணத்தநீ கேட்ப தும்மதி
பாதகம் மனக்கறைப் படுக்கு மென்பரால். |
19 |
|
|
|
|
மாந்தளிர்
மேனியை மருட்டு நோக்கினைத்
தேந்தள வரும்பினிற் றிகழ்புன் மூரலை
ஏந்திழை யிச்சக மொழியை யென்மனம்
நீந்தவோர் நெடும்புணை நிகழ்ந்த தவ்வுழி. |
20 |
|
|
|
|
பணிவிடத்
திளநலம் பகரும் பைந்தொடிக்
கணிகையர் காலடி கவிழ்க்குங் காமவெம்
பிணிகெழு மாந்தரைப் பிலத்தென் றோங்கிய
அணிகிளர் திருமொழி யதுமற் றென்பவே. |
21 |
|
|
|
|
நல்லுரை
கடைப்பிடித் தைய நங்கைபாற்
செல்லிரு விழிகளைத் திருகித் தீங்குரை
புல்லிடா திருசெவி பொத்திப் பொள்ளென
வல்லிதின் விரைந்தனன் வலைக்குத் தப்பியே. |
22 |