|
மாயமோ
காதுரி யென்னும் வம்பியே
ஏயென விகழ்ந்தணி லேற விட்டவோர்
நாயெனக் குரைத்துள நலிந்து நின்றனள்
சீயெனத் துரந்தனன் செலவை நோக்கியே. |
23 |
|
|
|
|
என்றபோ
தாரிய னெம்பி மற்றிவள்
நன்றறி விடலையோ சேப்பை நச்சிய
அன்றவ னாருயிர்க் கறுதி சூழந்தனள்
வென்றிவேந் தருளினால் விலகி யுய்ந்தனன். |
24 |
|
|
|
|
அத்தகு
திருவரு ளாட்சி யேயுனை
இத்தலை புரந்ததென் றீச னாமத்தைத்
துத்தியஞ் செய்தினிச் சொல்லு கென்றனன்
வித்தக நிதானியும் விளம்பன் மேயினான். |
25 |
|
|
|
|
ஆரணக்
கிழவசஞ் சலவ டுக்கலின்
சாரண வியபொழு தாதி தந்தையாம்
பூரண நரைதிரைக் கிழவன் போந்துபல்
கோரணிப் படுமொழி கூறன் மேயினான். |
26 |
|
|
|
|
முகக்குறி
யாலொரு முத்தி யாத்திரை
உகக்குனை நூனெறி யொழுகி யென்பதும்
அகக்கணீ யருவருத் தவனி வாழ்வெலாம்
இகக்குனை யென்பது மெளிதிற் றேர்ந்தனன். |
27 |
|
|
|
|
மண்ணுரு
வினைமருங் குறவு மண்ணுளை
மண்ணுகர் வாழ்க்கையை மண்ணின் வைகுவை
மண்ணின்மண் ணாகுவை மரித்தி தோரலை
மண்ணினை யிகத்தியென் மதிகொண் டேழைநீ. |
28 |
|
|
|
|
கையக
வெண்ணெயைக் கருதி டாதுபோய்
நெய்யகந் தொறும்வினாய் நேடு வாரினே
வையக வாழ்வினை வரைந்து வானுறு
மெய்யக வாழ்வினை விழைவை நன்றரோ. |
29 |
|
|
|
|
பாழியம்
புவிநலம் பழுத்த வென்மனைக்
கூழியஞ் செயமன மொருப்பட் டாயெனின்
ஆழியே னையமூ வாசை மாதரை
வாழிய நினக்குயான் மணமு டிப்பனால். |
30 |