|
ஆயிடை
யாக்கைநின் றகன்ற தாங்கொலுண்
மேயபூ ருவவியற் கூறு வேந்தருட்
சாயலைப் பிடித்துநூற் றடத்தி லோடினேன்
போயின னறக்கொடுங் கிழவன் பொங்கியே. |
39
|
|
|
|
|
வல்விரைந்
தணுகினே னுபாதி மல்கிய
கல்வரை கண்டுளங் கலங்கிற் றாயினும்
ஒல்வகை யடிபெயர்த் தேறி யோங்கலிற்
செல்வநந் தனவனச் சேக்கை சேர்ந்தனன். |
40 |
|
|
|
|
அக்கணத்
தெரிமுக னழலுஞ் செங்கணான்
கொக்கரித் துருமெனக் குமுறி யண்மியோர்
உக்கிரன் பணைக்கர மோச்சி யொல்லென
மிக்குரத் தோரடி யடித்து வீழ்த்தினான்.
|
41
|
|
|
|
|
கண்ணிலான்
மும்முறை கனன்ற டித்தெனை
மண்ணுற விழுத்தியம் முதுவன் மன்றுற
எண்ணினை யன்றுகொ லென்னச் சீறினான்
உண்ணில வெனதுயி ரூச லாடவே. |
42 |
|
|
|
|
கூற்றமிவ்
வுருக்கொடென் னுயிர்கு டிக்கவந்
தேற்றதென் வினைவிளை கால மீதெனா
ஆற்றல னாகிநெஞ் சழிந்து கண்கணீர்
ஊற்றிட வாவிநொந் துலைந்து போற்றியே. |
43 |
|
|
|
|
பூரிய
னேனுளம் புணர்த்த தீமையை
ஆரிய பொறுத்தரு ளளித்துக் காவென
நேரியல் வரன்முறை நிகழ்த்த நெய்சொரி
வீரியக் கனலென வெகுளி மூண்டதால். |
44 |
|
|
|
|
அவ்வயிற்
றயையளி கருணை யாரருள்
திவ்விய வன்பெனுங் குணந்தி ரண்டவோர்
செவ்விய னடுத்துளந் தெருட்டிச் செங்கணான்
வெவ்விய கரத்தெனை விலக்கிப் போயினார். |
45 |
|
|
|
|
வழுத்தரும்
பெரும்புகழ் வரதன் வந்தெனை
இழுத்தரு ளளித்திடா ரென்னில் வெஞ்சினம்
பழுத்தவன் கொன்றுயிர் பருகு வானன்றேல்
தொழுத்தையாக் குவன்சிறைப் படுத்தித் தூய்மையோய். |
46 |