|
நிண்ணய
மிதுவென நிகழ்த்துங் காலையக்
கண்ணிலான் கற்பனைக் கிழவன் காண்டகு
தண்ணளிக் குரிசிலெம் ஜீவ தாரக
புண்ணிய மூர்த்தியென் றறிதி புந்தியோய். |
47 |
|
|
|
|
கற்பனை
நெறிகதி காட்டு மாயினுஞ்
சற்பனை விளைக்குமோர் சற்று நீங்கிடில்
தற்பர னருள்வழி சருக்க லாயினும்
பொற்புறு நீதிவான் கதிபு குத்துமால். |
48 |
|
|
|
|
சாதன
மிழந்துயான் றவித்த வவ்வயின்
நீதுய ருழந்தமை நினையுங் காலையத்
தாதுகு நறுமலர்ச் சரளக் காவணஞ்
சோதனை நந்தனச் சூழல்போன் மென்றான். |
49 |
|
|
|
|
அந்தண
னுரையகத் தழுந்த வாரிய
விந்தையைங் காயத்தை விழியிற் கண்டுமென்
சிந்தனை தெருண்டில னாண்டு தெய்விக
மைந்தனென் றுணர்ந்தனன் பின்பு வள்ளியோய். |
50 |
|
|
|
|
வருத்தியென்
னாருயிர் வதைத்த மற்றொரு
விருத்தனை முன்னரே யறிவன் வீட்டகத்
திருத்தியே லிம்மனை யெரிம டுப்பலென்
றுருத்தனன் பூருவாச் சிரமத் துற்றரோ. |
51 |
|
|
|
|
ஐயநின்
னுரையினா லருளின் மாட்சியும்
மையகன் மெய்விசு வாச நீதியுந்
துய்யகற் பனையநுட் டிப்பின் சூழ்ச்சியும்
ஐயமின் றாகவென் னகந்தெ ருண்டதால். |
52 |
|
|
|
|
வேறு. |
|
|
|
|
|
எந்தையதன்
மேல்வழிநி கழ்ந்தவையி னிக்கேள்
நந்தனம்வி டுத்துமலை யுச்சிநடை கூடி
வந்தவமை யத்திரும டங்கலரி யேறு
பந்தமொடு றங்குசெயல் கண்டுயிர்பதைத்தேன். |
53 |
|
|
|
|
மத்தியுறு
நண்பகலி னுங்கதம டங்கல்
நித்திரைசெய் நீர்மையினு நெஞ்சு துணி வுற்றே
அத்திசைய கன்றுதிரு மாளிகையை யண்மிப்
பத்திமறு கூடுதிகழ் பாதைகொடு போந்தேன். |
54
|