|
சஞ்சலம
லைச்சிகரி நின்றிழித டத்தில்
எஞ்சியமு கத்தருளி லானிதய கோட்டன்
நெஞ்சுறவ ணைந்திநெறி நீசமுறு மேழைப்
பஞ்சைகள்ப யின்றிடுமோர் தாழ்படுக ருய்க்கும். |
55 |
|
|
|
|
சீரொடுசி
றப்பிலது செல்வர்புக வொல்கும்
பேருளதி கழ்ச்சியுறு பெற்றியது நீயக்
காரிருடொ கும்படுக ரிற்கவிழ்தி யேனம்
ஊரவம தித்துநகை செய்யுமிஃ துண்மை. |
56 |
|
|
|
|
திருவிலிக
ளோடுநெறி சேர்தன்மதி யன்றால்
கருவனிறு மாப்பனகங் காரியோடி டம்பன்
பெருமிதனு னக்குறவ ராயவர்பி ணங்கிப்
பொருவரிய மூடனென வெள்ளுவர்பொ றாரால். |
57 |
|
|
|
|
நம்பினஜ
னங்கள்செலு நன்னெறிவி னாவின்
அம்மபெரு மைத்திடரின் மீதுசெல மார்க்கம்
எம்மவர்கு ழாங்கொளத லத்தினிதி னுய்க்குஞ்
செம்மையுறு மேலவர்செ லும்பரிசு மோர்தி. |
58 |
|
|
|
|
இலகுபுகழ்
மேன்மையுல கின்பசுக மெல்லாங்
குலவுநெறி விட்டிழிகு லீனர்நெறி கொள்வாய்
உலகருள தென்பதிலை யென்னிலுல குக்கோர்
அலகையிவ னென்பரித றிந்திலைகொ லென்றான். |
59 |
|
|
|
|
கோணியம
னத்தனிது கூறலும றுத்துச்
சேணிலவு பூபதிதி கழ்த்து நெறி சேர்வல்
கோணிலைதி ரிந்துலகு குப்புறுவ தேனும்
நீணிரைய முய்க்குநெறி நேரடிபெ யர்க்கேன். |
60 |
|
|
|
|
என்றருள்வ
ழிப்படமு யன்றுளமி சைந்தேன்
அன்றுகிளை நட்புரிமை யாயவுற வோர்க்குப்
பொன்றினவ னானவரெ னக்குமது போல்வர்
இன்றவர்வ ழிப்படுவ தெங்ஙனம டுக்கும். |
61
|
|
|
|
|
மாயவிரு
ளோடுசுடர் வான்பரிதி காலுஞ்
சேயொளிம டுத்துறவு செய்யுமெனி லன்றோ
பேயடிய ரோடுயர்பெ ருந்தகைதொ ழும்பர்
ஆயவர்ப ரிந்துறவு செய்வரென லாமால்.
|
62 |