பக்கம் எண் :

324

 

ஈதுவல மீதிடமெ னக்கையறி யாத
பேதையர்பு கழ்ந்துதுதி பேசிடினு மென்கொல்
ஊதியமி கழ்ந்திடினு முண்டுபடு மேயோ
சேதமிலை யூரவம திப்பிலொரு சிந்தை.

63
     
  கோட்டமுறு தாழ்மையுயர் மேன்மைநிலை கூட்டுங்
கேட்டிடைவி ழுத்துநனி கேதமுறு சிந்தை
மேட்டிமையி தோர்ந்துமறை வேதியர்செல் தாழ்மைப்
பாட்டையைவி ழைந்தனனிம் மேட்டுநெறி பாரேன்.
64
     
  என்றறுதி கூறியய லேகெனவி டுத்துத்
துன்றியவு பாதிதொகு சூழலையொ ரீஇப்பின்
வென்றிதரு தாழ்மைநில மேவிவில காமே
மன்றனக ராதிபனை வாழ்த்திவழி வந்தேன்.
65
     
  மட்கிமதி குன்றறிம டக்குடிநி லாவும்
வெட்கமெதிர் வந்தெனைவி டாப்பிடிபி டித்தே
கட்கமென நெஞ்சுருவு கைப்புரைதொ டுத்தான்
உட்கிமறு குற்றதொரு கன்னலென துள்ளம்.
66
     
  செத்தபின்வ ரும்பரம சிற்சுகமெ னக்கண்
டுய்த்துணர்கி லாதுமன முட்கியுழல் தேவ
பத்திநடை யென்பதுப யித்தியம லாலோர்
சத்துமிலை யென்பதெமர் சாசுவத கொள்கை.
67
     
  மாசறுகு லத்தமரை வாழ்வைமதி யாமே
நீசரொடு தாழ்படுகர் நேர்ந்துநடை கொள்ளல்
மோசமறி யாதமுழு மூடமதி யன்றிச்
சீசியடி மைத்தனமி தென்கொலிழி ஜென்மம்.
68
     
  நாணலைகு லப்பழியை நச்சுறவின் மானம்
பேணலைந கைத்துலகு பேசுபடு நிந்தை
காணலைக ழித்தெறிதி காமியந லத்தைப்
பூணலைபு விப்படுபு கழ்ச்சிசிறி தேனும்.
69
     
  மேதினியி லேபிரபு டீகரதி வீரர்
மாதகைய ஞானியர்வ ரம்பிலரி மார்க்கம்
மேதகைய தன்றெனவெ றுத்தனர்நி னைப்போற்
பேதையர லாலெவர்பி டித்திழிவு பெற்றார்.
70