|
கேவலரோ
டாலயம ரீஇத்துதிகி ளந்தும்
ஆவலின்வ ணங்கியும ருட்குரவர் போதம்
மேவியுமு ணர்ந்திருவி ழிப்புனல்சொ ரிந்தும்
பாவனைசெய் நாணிலியி தெத்தனைப ழிப்பாம்.
|
71 |
|
|
|
|
செய்பிழைபொ
றுக்கெனவி ரக்குதல்தி ருட்டிற்
கைவருபொ ருட்குரியர் கையுறவ ழங்கல்
பொய்வழிய ரும்பொருள்பு றத்தெறித லென்றும்
மெய்வழிமி டிப்படலி தெத்தனைகொல் வெட்கம்.
|
72 |
|
|
|
|
கானமுழ
லுங்கவரி மாவுயிர்க ழிந்தே
ஈனமுறு மோர்மயிரி டர்ப்படுவ தேனும்
ஊனுடல்வ ளர்த்துயிர்சு மந்துலகு லாவி
மானமழி யப்பெறுமோர் வாழ்வுமுள தேயோ.
|
73 |
|
|
|
|
தலையினிழி
வுற்றமயி ரேயனையர் தத்தம்
நிலையினிழி வுற்றகடை யென்றறநி கழ்த்துங்
கலையைமுச லாக்ரமதி காட்டினைதி கழ்த்திப்
புலையரொடு கூட்டுணவி யைந்தபொழு தத்தே. |
74 |
|
|
|
|
இத்தகைய
வெட்கமுமி கழ்ச்சியுமி ழுக்குஞ்
செத்தனைய துன்பமுமு ழக்கவரு தேவ
பத்தியைவெ றுத்துலக கேளிர்நடை பற்றிச்
சித்தமகிழ் கென்றுபல செப்பினனெ டுத்தே.
|
75 |
|
|
|
|
வேறு. |
|
|
|
|
|
இன்ன
வாறிகலி வெட்கமெனு மீன னெதிரில்
துன்னி நின்றெனித யஞ்சுடவு ரைத்த சுடுசொன்
மன்னு ஜீவவச னத்தினொடு மாறு கொளவும்
என்னு ளேநனியு னைந்தினைய வெண்ணி னனரோ. |
76 |
|
|
|
|
உலகர்
மேன்மையென வுன்னுவதை யுன்ன தநிலத்
தலகி லாதிபர கத்தருவ ருப்ப ரறநூல்
விலகி மற்றிவன்வி திப்பதுமெய் வேத விதியன்
றலகை துன்மதிய ளாயநர மேதை யசடால். |
77 |
|
|
|
|
மன்றி
ரக்ஷணைவ ழங்கவரு மாம றைகொடே
நன்ற ருட்குமா நாயகன டுப்பு ரிவரீ
தன்றி யிவ்வுலக கந்தையறி யாமை செருமிப்
பொன்று புன்னரர்கொ லன்றெமைந டுப்பு ரிவதே. |
78
|