பக்கம் எண் :

326

  வாவு கோடாம ணங்குலத மாலை மதியா
தோவி லாதுலகு வந்துதலை சூடுமு ணர்வில்
பாவ காரியர்ப யித்தியமெ னாவிகழு பத்தியைத்
தேவ பூபதிம தித்துளமு வப்பர் தினமும்.
79
     
  சருவ லோகமுமொ ருங்கெதிர்த டுத்த பொழுதும்
நிருவி காரபதி வாக்குநிலை நின்று நிலவும்
மருவு யிர்ப்பொருவ ழிப்படம டுத்த பொழுதும்
பாருவில் மாருதக திக்கெதிர்பு லப்ப டுவதோ.
80
     
 

வரம னோகரன டித்துணைம ரீஇய வறியோர்
பரம செல்வமுறு பாக்கியர்ப கைத்த மறவோர்
தரமி லாதுலக வாழ்வுறுத ருக்க ரெனினும்
உரமி லாதுழல பாக்கியரொ ருங்க டையவே.

81
     
  அருளி னாயவொரு செல்வமதி செல்வ மதனைத்
தெருளி னாயபர ஞானியர்தெ ரிந்து திகழ்வர்
பொருளி னாயவொரு பூதியிழி பூதி யிதனை
மருளி னாயவழி பூரியர்ம தித்து மகிழ்வர்.
82
     
  மீது றும்பரம ராஜ்ஜியம்வி ரும்பி முயல்வோர்
பேதை யென்றுல கிகழ்ந்துபழி பேசு மெனினும்
மேதை யாயபர ஞானியரெ னாவி புதரே
காத லோடுபுகழ் வார்நனிக ளிப்பு மிகவே.
83
     
  என்ற கத்துணர்வெ ழும்பலிலெ னக்கெ திரிலே
நின்ற வெட்கிமுக நோக்கியட நீச மதியோய்
இன்று னக்கிடம ளிப்பனெனி னீச னொருசேய்
அன்றெ னக்கிடம ளிப்பர்கொல ருட்ச ரணிலே.
84
     
  ஆன்ம ரக்ஷணைய ழிக்கவரு சத்து ருவுனை
நான்ம தித்துரைந விற்றிடின லங்கொ ணடுநாள்
வான்மு கத்திரவி போலொளிவ ழங்கு மகிமைக்
கோன்மு கத்தெதிர்வி ழிக்கவருள் கூடு வதுகொல்.
85
     
  ஜீவ நூனெறிபி டிக்கமகி சிற்ச பைமுறை
ஆவ லாயநுச ரிக்கவரு கார ணர்குழாத்
தோவில் கூட்டுறவு கொள்ளவுள மொல்கு வனெனில்
தேவ வாசியருண் மல்குவகை யாது தெரியேன்.
86