பக்கம் எண் :

327

  நன்மை செய்யவெனி னுட்கிமன நாணி நலிவை
தின்மை செய்யெவெனின் முன்னிடுதி சிந்தை திருகாய்
புன்மை யோய்கடிது போதியயல் போதி யெனவன்
சொன்மை யாலுறவெ ருட்டுபுது ரந்த னனரோ.
87
     
 

நின்றி டாதுபடு நீசமதி நீணெ றியிலென்
பின்றொ டர்ந்தருகி டைக்கிடைபி தற்றி வரவும்
வன்றி றற்கொடுவி ழுத்தினெனி லத்து மறியத்
தென்றி சைக்கணெறி கூடினன்வி ரைந்து சிறியேன்.

88
     
  இகலொ ழித்துதய வெல்வொளித வழ்ந்து மிளிரும்
பகலி லாருயிர்ப தைக்கமர ணப்ப டுகர்வந்
தகில லோகசர ணாலையர ருட்டு ணைமையாற்
சகல விக்கனமு நீந்தினனி தென்ச ரிதமால்.
89
     
  என்ன நன்மதிநி தானிசொலி யெந்தை யினிநீ
பன்னு குன்சரித மென்றுபணி விற்ப கர்தலும்
பொன்னி லத்துரைசெ வித்தொளைபொ துத்த பொழுதே
என்னு ளத்துணர்வெ ழுந்ததென வெண்ணி மொழிவான்.
90
     
                         வேறு.  
     
  உரிமைநீத் தொளியை நாடி யொருமனை குறுகி யாய்ந்து
வெரிநுறு சும்மை வீழ்த்தி வெற்பிடர் கடந்தி ராவின்
அரமனை விருந்துண் டிப்பா லழிம்பனை யமரிற் போக்கி
மரணவைப் பொரீஇநின் னட்பின்வலியுற்றேன் மற்றுங்கேட்டி.
91
     
  உத்தம வுபாதி யோங்கற் சிகரிமீ தொருகோல் வேந்தன்
சத்திர மணைந்தோர் வைகல் தரித்துளை யெனினென் சொல்கேள்
முத்திசா தனங்க ளாக முறைமுறை திகழுங் காட்சி
எத்தனை யதிகங் காண்பை யெத்தனை பரமா னந்தம்.
92
     
  கழிந்ததற் கிரங்க லென்னோ கானகத் தெதிர்ந்த நீசன்
பிழிந்துதீ விடத்தை யூட்டும் பேயெனப் பிடித்து நிந்தை
மொழிந்துனைக் கெடுக்க முற்று முரணிய மூடக் கொள்கை
அழிந்திடச் சிதைத்த வுன்ற னாண்மையே யாண்மை யாமால்.
93
     
  துதிபெறு ஞான முள்ளார் சுதந்தர மகிமை யாகும்
மதியிலா மூடர்க் கென்றும் வாய்ப்பது வெட்க மென்னா
நிதிமிகப் படைத்த ஞானி நீதிவாக் கியத்தை யோர்ந்து
சதிபுரி வெட்கந் துஞ்சச் சமழ்ப்பதே தரும மெம்பி.
94