மருளுறு
கங்குற் போது மாரணச் சூழ னீந்த
அருளொளி திகழ்த்தி யென்னை யாதரித் ததுமற் றுன்னைத்
தெருளொளி திகழ்த்திக் காத்த செவ்வியுந் துவிதமாய
பொருளெலாம் புரக்கும் பெம்மான் பூரண ஞானத் தாட்சி.
|
95
|
|
|
கோல்வழி
யிழுக்கா வேந்தன் குவலயா டவியி லெம்மை
நூல்வழி நடத்திக் காத்த நுவலருங் கருணை நம்பி
மால்வழி விழாது வல்லே மானத தியானத் தோடு
மேல்வழி பிடித்து மென்னா விருவரும் விரைந்து சென்றார்.
|
96 |
|
|
நிதானிநட்பு
படலம் முற்றிற்று. |
|
|
|
|
|
|
|
உலப்பிலா
வாதி மூலத் தொருபரஞ் சுடரை நாடிப்
புலப்பகை களைந்த வேத புங்கவர் குழாத்த னேனும்
நிலப்பொறை யாகி நுண்ணூ னிண்ணயங் கருத்து ளூன்றா
அலப்பனென் றொருபேர் பெற்ற வசடனங் கவர்முன் சென்றான்.
|
1 |
|
|
சேய்மையின்
விளங்கக் கண்ட தேகந்தான் கிட்டக் கிட்டத்
தேய்மதி போலக் குன்றிக் தேசழிந் துருவேறாக
நோய்மைமிக் குடையான் கொல்லோ விவனென நுனித்துநோக்கி
ஆய்மதி நிதானி யொல்லை யலப்பனை யுசாவித் தேர்வான்.
|
2 |
|
|
பூருவ
தேசம் யாது பொருவரு நாச தேசம்
ஊரெது சள்வாய்க் கோட்ட முறுவதெங் கும்பர் நாட்டுக்
சாருளை குமரே சன்பா லாவலென் னிரக்ஷை வேண்டி
நேருமோ வொன்றித் தேக நேருமென் றுரைப்ப தானான்.
|
3 |
|
|
இத்தகு
துணையெ னக்கிங் கிசைந்ததெத் தனைம கிழ்ச்சி
உத்தம வழிதோன் றாமே யுவந்துசெல் வதற்கு பாயம்
பத்திமார்க் கத்த ராய பவித்திர ரோடு செய்யும்
மித்திரங் கலந்த சம்பா ஷணையினின் வேறொன் றுண்டோ.
|
4 |
|
|
முன்முக
மறியே னுன்னை யாயினு முனிவொன் றிகதுரைத்து
நின்முகங் கண்டும் நேரே வினவிய நேர்மை யோன் மடங்காத்
என்முகங் களித்த காட்சி யெதிர்ந்தனை பளிக்கோடு திகைத்
தனைநீ நன்முகங் காட்டு நெஞ்சத் தன்மையை யென்பனிவன்.
|
5 |