பக்கம் எண் :

329

  சொன்மதி தெருளா ராகிச் சூழ்ச்சியற் றுழலு மாந்தர்
நன்மையும் பயனு நாடார் நகைத்துரை யாடி யந்தோ
பொன்மையாக் கிடைத்த வாணாட்பொழுதுபோக்                                கடிப்பரென்கொன்
ஜென்மசா பலிய மீதென் சிந்தைக்கோர் பெரிய துக்கம்.

6
     
  என்னலு நிதானி வீணே யிறைப்பொழு தேனும் போக்கல்
கொன்னுரை வழங்க லாதி கொடுந்தொழில் துக்கந் துக்கம்
பொன்னிலத் தரசன் சீர்த்தி புனைந்துரை யாடிப் போக்கும்
இந்நிலத் துரிய வைக லிருமைக்கு முறுதி யென்றான்.
7
     
  ஆங்கது கேட்டு நின்சொல் லனைத்துநல் லுணர்ச்சி மூட்டும்
பாங்குள நவீனச் செய்தி பயக்குமாந் தருக்கின் பென்னின்
வீங்குபுண் ணியலோ கத்து விசேடமான் மியப்ப கர்ச்சி
ஓங்கிய பரமா னந்த மூட்டுதற் கைய முண்டோ.
8
     
  இம்மையி னிகழ்ப வெல்லா மிறுதலின் மாயை யேயாம்
அம்மையி னிகழ்வ வெல்லா மழிவில்மெய்ப் பொருளா மாயிற்
செம்மைசேர் கதியைச் சேரத் திகழ்மறு ஜெனனம் வேண்டும்
நம்மையீ டேற்றொ ணாதா னஞ்சுய நீதிப் போலி.
9
     
  முத்திநாட் டிளைய கோமான் முறைபிச காதிங் குய்த்த
நித்திய ஜீவன் மல்கு நீதியே நமக்கு வேண்டும்
இத்தகு நீர்மை யுள்ளி யெடுத்துரை யாட வாட
உத்தம தேவ பக்தி யொளிருநன் கிதயத் தோங்கி.
10
     
  மெய்க்குணப் படுத லுண்டாம் விசுவாசம் வளரும் பாவச்
சிக்கறும் பிரார்த்த னைக்குச் சிந்தனை திருந்துந் துன்பந்
துக்கநோய் பகையே யாதி சோதனைக் கிடையா துள்ளம்
பக்குவப் படுநம் பிக்கை பலப்படு மருள்மெய் வாக்கின்.
11
     
  மித்தையை நம்பி யந்தோ வீணவ பத்தி யென்னும்
பித்தமிக் கவித்தை மூடிப் பிரபஞ்சத் துழலு மாந்தர்
நித்திய ஜீவ மார்க்க நெறிபிடித் துய்ய வேத
திகழ்த்தும் வாஞ்சை தழைக்குமெய்ப் பத்தி யாலே.
12
     
  துதிபெறு ஞான ஜீவன் குலவுதற் கிருத யத்தில்
மதியிலா மூடர்க் யன்பின் நனிவிசு வாசம் வேண்டும்
நிதிமிகப் படைத்ன் றோரா தெத்தனை யேழை மாந்தர்
சதிபுரி வெட்கந் தூகே சொந்தப் புண்ணிய முளவென் றோம்பி.
13