|
கோட்டமில்
தேவ பத்தர் கூட்டுற வடைந்து செய்யுந்
தாட்டிக மான சம்பா ஷணைபெறா மையினா லிந்தக்
கேட்டினுட் படுவ ரென்னே கிளரிருஞ் சிறக ரின்றி
மோட்டுயர் விசும்பை முட்ட முடிவதோ பறவைக் கென்றான்.
|
14 |
|
|
|
|
தைவிக
கிருபை யொன்றே தணப்பிலா வவித்தை நீக்கி
மெய்விளக் கிடுமெஞ் ஞான்றும் வித்தகப் பயிற்சி யேனுங்
கைவரு கல்வி யேனுங் கதிநலங் காட்டா தென்ற
பொய்வரை புந்திக் கொல்லை புகலுமா லலப்பன் மாதோ.
|
15 |
|
|
|
|
உன்னதத்
தருளொன் றின்றே லுறுநலம் யாது மின்றாம்
பன்னருந் தூய நீதி பகர்விதி நிடேதத் தாலே
துன்னுமென் றுழல்வோ ரெல்லாந் துரியநா யகனோர் செம்மற்
சந்நிதி நின்று வீழ்ந்த சழக்கரென் றுரைக்கும் வேதம்.
|
16 |
|
|
|
|
மற்றிதே
போலுந் தூய மறைமொழி யநேகந் தீரக்
கற்றறிந் துளன்யா னென்னுங் காலைநன் னிதானி நன்றாம்
எற்றியாங் குறிக்கொண் டின்னே யெடுத்துரை யாடத் தக்க
நற்றிற மென்ன லோடு நாக்கடிப் பிரட்டிற் றன்றே.
|
17 |
|
|
|
|
இகபரம்
விதிநி டேத மெழிலிர க்ஷணிய வேதம்
மகபதி யருள்சன் மார்க்கம் வைதீக லௌகீ கங்கள்
ஜெகவிசே டங்கள் காலத் திரையங்க டெரிக்க வல்லேன்
தகவுளாய் விரும்பிற் றொன்றைச் சாற்றுதி நிகழ்த்த
வென்றான். |
18 |
|
|
|
|
அவ்வயிற்
றனித்துச் சென்ற வறங்கிளர் மறையோற் கிட்டிச்
செவ்விய நிதானி பேச்சுத் திறமுளா னிவனைத் தேரின்
இவ்வழி பிடித் நங்கட் கேற்றவோர் துணைமை போலும்
ஒவ்வுமொவ் வாதென் றூகித் துன்கருத் துரைத்தி யென்னா.
|
19
|
|
|
|
|
தன்னுயிர்த்
தோழன் பேச்சுச் சாதுரி யத்திற் சிக்கி
இந்நிலை யுசாவி னானிங் கென்பதை யகத்துட் கொண்டு
புன்னகை கோட்டி யென்கொன் மருண்டனை புலமை மிக்கோய்
பன்னுவல் கேட்டி யென்னப் பகருவான் பனவன் மாதோ.
|
20 |
|
|
|
|
வேறு |
|
|
|
|
|
தெருட்டுமடி
யவர்போலத் திருவசன மெடுத்துரைத்து
மருட்டுவான் றனையறியா மனுக்கடமை மனமடங்காத்
திருட்டுவாய்ப் பழக்கமொழித் திறங்கண்டு திகைத்தனைநீ
அருட்டிறனை யொருசற்று மறியாத வசடனிவன்.
|
21 |