|
தன்னையிவ
னறிகின்ற தகைமையினும் பதின்மடங்கா
நன்னரறி குவன்வாழ்க்கை நாசதே சத்தொருசார்
என்னயலூர்க் குடிதந்தை வாசால னிவனலப்பன்
இன்னிசைவாய் மொழிமதுர மிதயமெட்டிக் கனியாமால்.
|
22 |
|
|
|
|
உருக்கவினிச்
சேய்மையினி னுவப்பளிக்கு மண்மையுற
அருக்களிப்பைத் தருஞ்சிலசித் திரப்படங்க ளவைபோலும்
உருக்கிமன முவப்பிக்கு முரையாதி புறக்காட்சி
அருக்களிப்பைத் தருமிவன் றன் னகக்காட்சி
யடுப்போர்க்கே.
|
23 |
|
|
|
|
பரிகசிப்பென்
றுளங்கோடல் பரமார்த்தம் பழிப்பின்றால்
தெரிகுவரென் சிந்தையைநந் தேவர்பிரான் முறைதவறி
தரியலரா யினுங்குற்றஞ் சாற்றமனந் துணியேன்யான்
பெரியபிழை யந்தியர்தம் பிழைகாணும் பிழையன்றோ.
|
24 |
|
|
|
|
ஏதமறு
திருத்தொண்டர்க் கிசையநடிப் பதுபோலச்
சூதுபொரு கழகமதுக் கடைசோரர் தொக்ககுழாந்
தீதகலா விலைமாதர் சேரியிவற் றவரவர்க்குப்
பேதமற நடித்திசையப் பேசுசமர்த் துளனிவன்காண்.
|
25 |
|
|
|
|
மன்றாட்டு
மனஸ்தாபம் விசுவாச மறுஜெனனம்
என்றாய வுபதேச வியலைவிரித் துரைப்பனவற்
றொன்றானுந் தனதிதயத் துணராக்கற் றறிமோழை
குன்றாத தீக்கருமி குணங்காணாக் கொடுந்தோஷி.
|
26 |
|
|
|
|
பண்டைமறைத்
திருவசனம் படித்துணர்ந்தும் பயனடையாச்
சண்டாள வறியஹிரு தயந்தனக்கு யானைத்தீ
உண்டுதிர்ந்த விளங்கனியு முருப்படுதற் குதவாமே
கொண்டகருப் பயனிழந்த குடம்பையுமே நிகிர்குணிக்கின்.
|
27 |
|
|
|
|
விண்டியற்று
மறைவினைகள் வெளிப்படுதற் கஞ்சுமிவன்
அண்டர்நா யகனெல்லா மறிகுவரென் றஞ்சுகிலான்
உண்டுசுகித் துறங்குதலுக் குளங்கவல்வான் பாவியெனக்
கண்டுணர்ந்தா வியிற்கலங்கிக் கவலுவா னலன்கண்டாய்.
|
28 |
|
|
|
|
மாதகைய
கிறிஸ்துவினூன் மார்க்கத்துக் கிடறுகட்டை
வேதபா ரகர்க்கெல்லாம் விலக்கரிய பெருநிந்தை
ஏதிலருக் கருவருப்பா மில்லவர்க்கு மனக்கசப்பு
பூதலத்துக் கொருபாரம் புலையனிவ னிலைதேரின்.
|
29 |