|
வஞ்சமொழிக்
குகைவாயில் வதிந்திருக்கு மறைவசனம்
நெஞ்சகத்துத் தணவாமே நிலைத்திருக்கும் பைசாசஞ்
செஞ்செவே யவயவத்துச் செறிந்திருக்கும் பலதீமை
சஞ்சலநித் தியநாசந் தரித்திருக்கு மிவனடியில்.
|
30
|
|
|
|
|
மித்திரரை
யுறவினரை வேலைபுரி மாக்களைத்தன்
புத்திரரை மனையாளைப் புறத்தாரை யகத்தாரைச்
சித்திரமா மதிமருட்டித் தேசிகன்போற் றனைக்காட்டும்
எத்தனிவ னிசைபோய வெத்தரையு மெத்துவன்காண்.
|
31 |
|
|
|
|
ஆக்கையும்ஜீ
வனும்வெவ்வே றாயினுமொத் திருப்பதுபோல்
வாக்கொடுசெய் கருமங்கள் மாறுபடா திருத்தல்கடன்
வாக்கொடுசெய் கருமங்கள் மாறுபடு வறுமாற்றம்
ஆக்கைநிலை குலைந்துவிழுந் தழுகுமுடைப் பிணநாற்றம்.
|
32 |
|
|
|
|
பாருலகப்
புலையொழுக்கிற் படர்ந்தழுக்குப் படியாமே
நேருறுநன் னெறியொழுகித் தனைக்காக்கு நிலைசீயோன்
மேருநக ராதிபதி விருப்புறுமெய்த் தேவபத்தி
சீருறுநன் னடைகாண்டி மற்றதனிற் றிகழ்ஜீவன்.
|
33 |
|
|
|
|
வித்தாகுந்
திருவசன முளைகிளம்பி விசுவாச
உத்தமவே ரகத்தூன்றி யுள்ளன்பு கிளைத்தோங்கி
சுத்தநினை வெனுநறும்பூந் துணர்மலிந்துன் னதந்தோயும்
பத்தியெனுந் தருவினுக்கோர் நன்னடக்கை பயனாமால்.
|
34
|
|
|
|
|
மின்பிறங்கு
மழைமுகத்துக் குமரேசன் வியனுலக
மன்பதைக்கு நடுத்தீர்வை வகுக்குங்கால் விசுவாச
அன்புறழுங் கிரியைக்கே யருள்கிடைக்கும் வெறும்பேச்சுப்
புன்பதருக் கென்கிடைக்கு மெரிநிரையப் புழையல்லால்.
|
35 |
|
|
|
|
பத்தியெலாஞ்
சொல்லளவிற் பரிணமிக்கு மன்றியிவன்
குத்திரமார் நெஞ்சகத்துங் குடியகத்தும் பாழ்படுமால்
எத்தனைய ரென்றுரைக்கேன் றவவேடம் பூண்டிவன்போற்
பித்துலக மயலளைந்து புறம்பொதியும் பேதையரை.
|
36
|
|
|
|
|
அருள்வசத்தான்
மனமொழிமெய் யான்மசுத்தி யடைந்தன்றிப்
பொருளுணரா வறுமொழியாற் புநருலகிற் பெறலரிய
மருளறுபே ரின்பநலம் வாய்க்காதென் றருள்மறையுந்
தெருளுறுநன் மனச்சான்றுந் தெரிக்கின்ற திறமோர்தி.
|
37 |