பக்கம் எண் :

333

  செய்யும்வினை யொன்றாகச் செப்புமொழி பிறிதோன்றா
வையகத்து நடிக்கின்ற மறவோர்தங் கூட்டுறவு
பொய்யாய கனவிடத்தும் பொல்லாங்கு தருமென்றல்
மெய்யாய வறம்விளக்கும் வித்தகநூற் றுணிபென்றான்.

38
     
  நுண்ணறிவு பகுத்துணர்த்த னுவலுகின்ற சொற்சுவைமெய்
எண்ணநல மிழுக்காமே யலப்பனிய லெடுத்துரைத்த
பண்ணவனை மனதாரப் பழிச்சிநனி பரமார்த்த
நிண்ணயத்தைக் கடைப்பிடித்த நிதானிநிகழ்த் துவதானான்.
39
     
  விரதமா தவத்தோய்நின் விழுத்தகுசீர் மொழியாய
அரதநதீ பத்தாலிவ் வலப்பனகத் தியல்பெல்லாங்
கரதலா மலகமெனக் கண்டறிந்து கருத்துற்றேன்
சரதமுணர்த் தியவுனக்கோர் கைம்மாறு தரவுளதோ.
40
     
  செப்புமொழித் திறமன்றிச் செய்கைநலம் படையாத
தப்புளிமற் றிவன்றனக்குச் சாமியமா மிரைமீட்புக்
கப்படியென் றிரண்டன்றி யொன்றிருந்துங் கருதுங்கால்
துப்பிலவென் றிழிவுற்ற சூகரமுங் குறுமுயலும்.
41
     
  அசப்பியவாக் கியனென்ப தறியாமே வழித்துணைக்கு
வசப்படுவ னிவனென்னா மருண்டனனென் செவிவாயிற்
பசப்பியவீ ணலப்புமொழி பாரித்த மதுரமெலாங்
கசப்பாயிற் றெந்தாயுன் கட்டுரையின் வன்மையினால்.
42
     
  ஏர்திருத்தி யாழவுழு தெருப்பெய்தங் குவர்கழியப்
பார்திருத்திச் செழுஞ்சாலிப் பயிர்விளைப்பர் பணிமாக்கள்
ஓர்திருத்த மிலரையுமெய் யுணர்வெழுப்பி யுளம்புதுக்கிச்
சீர்திருத்தி யிரக்ஷணியப் பயிர்விளைப்பர் ஜீவன்முத்தர்.
43
     
  அறங்காட்டு மலப்புறுவா யகங்காட்டு மவயவங்கள்
மறங்காட்டு மனத்துணிவு மற்றிவற்கு நன்மையெலாம்
புறங்காட்டு மெனினுமியாம் பொதுநீதி யருள்ஞானத்
திறங்காட்டி யீடேறத் தெருட்டுதனங் கடனன்றோ.
44
     
 

என்றின்ன நிதானியெடுத் தியம்புதலு மறைவாணன்
நன்றுனது கருத்துண்மை நவின்றாலு நலந்தோன்றல்
இன்றிவன்பான் மாசுணத்துக் கின்னமுத மளித்தாலுங்
கொன்றுயிரைக் கவரும்விடங் கொடுப்பததன் குணமாமால்.

45