|
போயலப்பன்
றனைக்கிட்டிப் புரையறுமெய்த் தேவபத்தி
மேயகிரி யாசாரம் விமலவருண் மெய்யுறுதி
ஆயவற்றி னுட்பம்விரித் தறிவுறுத்தொப் புரைகொண்டு
வாயளவோ கிரியைமனை வயினுளவோ வெனவகுப்பாய்.
|
46 |
|
|
|
|
அருள்வசத்தா
லொருகாலுள் ளுடைந்துணர்வுற் றகந்திரும்பித்
தெருளுவனன் னடைகூடி வழிக்கோடல் செவ்வியதாம்
இருள்வசத்தா லிணங்கானே லெம்பியொருங் கந்நிலையே
மருள்பிடித்த வவனுறவை வரைவதுவே மரபென்றான்.
|
47 |
|
|
|
|
ஒக்குமிதே
சூழ்ச்சியென வுவந்தலப்ப னருகணைந்து
பக்குவமா யுரைதொடங்கிப் பரனருண்மா னவருளத்தின்
சிக்கறுத்து நிலைத்தூன்றி ஜீவரக்ஷை விளைக்குமெனின்
அக்கிரியைத் திறமெவ்வா றறிகுதுநீ யுரைக்கென்றான்.
|
48 |
|
|
|
|
சுத்தமனத்
தவனுரைக்கத் துருமலிந்த கருமனத்தான்
இத்தகைய வினாவினுக்கோ ரிருவகையுத் தரமுளவாம்
அத்தகைமை சுருக்கியினி தறைகுவனல் லருட்பேற்றாற்
சித்தமொரு முகமாகச் செப்புவன செவிக்கோடி.
|
49 |
|
|
|
|
மகத்துவதை
விபகிருபை மக்களிரு தயத்தடங்கி
அகத்தியல்தீ வினைப்பகையோ டமர்மூட்டுந் திறத்தானும்
மகத்துவமெய்ச் சுவிசேக்ஷ மறைபொருளை வகுத்துரைக்க
அகத்தூட்டு மறிவானு மருட்கிரியை வெளிப்படுமால்.
|
50 |
|
|
|
|
உத்தரமற்
றிவற்றைவிரித் துரைக்கவிருப் புளையாயின்
வித்தரிப்ப லெனநிகழ்த்த விழைவானை யெதிர்நோக்கி
அத்தனரு டீவினைய யருவருப்பித் திருமென்றல்
ஒத்திருக்கும் போராட்ட முளவெனினு மொவ்வாதால்.
|
51
|
|
|
|
|
திருவிளக்கு
மிரக்ஷணியத் திறந்தெரித்துத் தீவினையை
அருவருப்பித் துளம்புதுக்கி யாத்துமத்தை யுயிர்ப்பிக்கும்
மருவிருக்கு நறும்பிரச மலர்மறைந்தும் புறம்போந்து
பரிமளிக்கு மதுபோலும் பரன்கிருபைச் செயல்காண்டி.
|
52
|
|
|
|
|
சொந்தமதிச்
சூழ்ச்சியினாற் சுயவறிவாற் புறம்பொதிந்து
பந்தவினை பகைப்பார்போற் பலர்பேசிப் பகட்டிடுமிவ்
விந்தையினைப் பனித்துறையில் விரிபகன்றை வெறுந்ததுணரென்
நந்தரங்கத் தருவருப்ப ரருட்கிரியைத் திறந்தெரிவார்.
|
53 |