பக்கம் எண் :

336

  அரிய நுண்பொரு ளாய்ந்துளை யாயினுந்
தெரிய கிற்றிலை தேவகி ருபையின்
கிரியை யுண்மைகி ளக்குவல் கேட்டியென்
றுரிய காதலி னோதுவ தாயினான்.
62
   
  மூண்டெ ழுங்கிரு பைச்செயன் மொய்ம்பினைக்
காண்டல் செய்வரங் கைப்படு நெல்லியில்
ஆண்ட கைக்கித யாசன மாக்கிய
மாண்ட போதனர் வாய்மைம னக்கொணீ.
63
   
  எவனு ளங்குடி புக்கதெம் மானருள்
அவனு ளத்திரு ளாக்கிய தீவினைப்
பவவு ணர்ச்சிக திக்கப்ப டருறீஇத்
தவன முற்றுள்ளு டைந்துத விப்புறும்.
64
   
  சீசி மும்மலச் சேட்டையுட் சிக்கிய
நீச னேற்குய்வி யாதென நேடிடும்
ஈசன் கோபமெ ரிக்குமென் றேங்கியுள்
ளூச லாடுயிர்ப் புற்றுளங் கைத்தழும்.
65
   
  ஆய காலைய கத்துறு மாத்தும
நாய கன்சர ணாடுந லங்கிளர்
நேய மார்விசு வாசநி லைப்படத்
தூய சற்கரு மங்கடு ணியுமால்.
66
   
  ஜீவ ரக்ஷைதி ருத்திய ஜேசுவை
ஆவ லாய்ப்பின்றொ டர்ந்தடி யார்க்குறுந்
தேவ வாக்கின லம்பெறு சிந்தையின்
ஓவ லின்றிமு யலுமு வந்தரோ.
67
   
  முத்தி யிச்சைமு திர்ந்துமு ழுப்பரி
சுத்த வாஞ்சையி தயந்து தைந்திட
நித்தி யானந்த நின்மல தெய்வத்தைப்
பத்தி செய்யுமுள் ளன்புப ழுக்கவே.
68
   
  ஈண்டு சொற்றவி வற்றொடெம் மானடி
பூண்ட மெய்விசு வாசம்பு லப்பட
மாண்ட கும்பரி சுத்தவ ரம்புளே
காண்ட குந்நடை காட்டுங்க ழறல்போல்.
69