|
புல்லொ
ழுக்கமொ ருங்கறப் போக்கியே
நல்லொ ழுக்கந வின்றுநன் னூல்வழி
இல்லொ ழுக்கிக வாமலி ராப்பகல்
செல்லொ ழுக்கம்வி டாவகை செல்லுமால்.
|
70 |
|
|
|
|
கோதி
லுண்மைகு லாமுக்க ரணமெய்ப்
போத மல்குபு னிதசம் பாஷணை
சாது சங்கந்த லைப்படு கூட்டுற
வாதி காதலித் தாற்றிவ ழிபடும்.
|
71 |
|
|
|
|
தனைவெ
றுக்குந்த னைக்கெடுக் கின்றதீ
வினைவெ றுக்கும்வி சுவசித் தன்பொடு
முனைவற் போற்றிமு றைப்படு செய்கையில்
நினைவிற் காட்டிநி றுக்குமெய்ந் நூனெறி.
|
72
|
|
|
|
|
ஆய
வித்தகு சீலம கம்புறம்
மாய மின்றிம லிந்திடின் மற்றது
தூய தேவகி ருபைச்சு கிர்தமென்
றேய தொண்டரெ டுத்திசைப் பாரரோ.
|
73 |
|
|
|
|
விஞ்சத்
தன்னைவி யந்துமெய் வேதநூல்
அஞ்சொற் கொண்டுப கட்டும ழிம்பர்தங்
கஞ்சப் புன்னடை காண்டொறுங் காசினி
வஞ்சப் புல்லரென் றெள்ளிடும் வையுமால்.
|
74 |
|
|
|
|
மற்றிவ்
வுண்மைம றுத்திடப் பாலதேற்
சொற்றி யென்னவுஞ் சொற்றிலை யாதலாற்
கற்ற றிந்துரை யாடுங்க ருத்தினோய்
செற்றம் விட்டிது செப்பெனச் செப்புவான்.
|
75 |
|
|
|
|
உள்ளந்
தேருநம் முன்னத தெய்வமுந்
தள்ள ரும்மனச் சாக்ஷியுஞ் சாக்ஷியா
வள்ள லாரருட் சத்தியுன் வாயிலோ
தெள்ளி துள்ளுஞ்சி றந்தனவோ சொலாய்.
|
76 |
|
|
|
|
மெய்ய
தாமருட் பேற்றினை மேதையோ
டைய மின்றிய நுபவித் தாய்தியோ
செய்ய வாய்மொழி போலநின் செய்கையுந்
துய்ய வாயின வோபிறி தோசொலாய்.
|
77
|