பக்கம் எண் :

338

  பத்தி யுள்ளம்ப ழுத்துள தோவலாற்
கத்து வாய்மொழி மட்டிற்க னிந்ததோ
எத்தி றங்கருத் தியாவும்பு லப்படச்
சத்தி யம்புகல் வாயெனச் சாற்றினான்.

78
   
  திருக்கி லாரணன் செப்பிய செஞ்சொலாம்
உருக்கு செம்பலப் பன்செவி யூடுறீஇக்
கருக்கு சிந்தைய னாயகங் காந்தலிற்
பொருக்கெ னச்சில மாற்றம்பு கலுவான்.
79
   
  கற்ற தங்கைய ளவுகல் லாதவை
எற்று நீருல கத்தள வென்பர்மெய்
உற்ற றிந்தவர் நீயஃ தோரலை
முற்ற றிந்தனை போன்மொழி கிற்றியால்.
80
   
  குப்பைக் கீரைகொ ழுங்கவ டோச்சினுங்
கப்பற் பாய்மர மாகுங்க ணக்கதோ
செப்ப ருங்கலை தேரினு மெம்மனோர்க்
கொப்பு மோசிறி யாயுன்னு ரைத்திறம்.
81
   
  பேச்சுக் காலிற்பி ரானையி ழுப்பதுஞ்
சாக்ஷிக் காமனச் சான்றினைக் கொள்வதும்
மூச்சுக் காயயிரம் பொய்மொழி முந்தும்வெள்
வீச்சுக் காரர்கு ணத்தினின் வேறதோ.
82
   
  தன்குற் றங்களைத் தானற நீக்கிய
பின்குற் றந்தெரி வார்பிறர் பாலெனின்
என்குற் றமவர்க் கென்றுல கேத்துறும்
நன்குற் றார்சொலு நாடலை நம்பிநீ.
83
   
  பாதை காட்டும்வ ருத்தமும் பாழ்படும்
போது போக்குமுண் டாமெனப் புந்தியிற்
காத லித்துரை யாடக்க லந்தனன்
சாத முற்றத ருக்கியென் றெண்ணிலேன்.
84
   
  கனவி னுந்துயர் கண்டறி யாவொரு
பனவ னென்றுப குத்தறி யாதுநீ
மனவ ருத்தம்வி ளைத்திடும் வன்சொலால்
வினவு கிற்றியி தென்கொல்வி வேகமே.
85