பக்கம் எண் :

339

  உரவு நூனெறி யோதியு ணர்த்திய
குரவ னோவலை கொற்றவ னும்மலை
விரவு குற்றம்பி டித்திவெ றுஞ்சொலிற்
கரவி னென்னுளங் காணுதற் காரைநீ.

86
   
  நன்று நன்றுன்வி னாத்திற நானதற்
கொன்று முத்தரஞ் சொல்லவு ளங்கொளேன்
என்றி றத்துவி னாயவி வற்றினுக்
குன்றி றத்துறு காரண மோதென்றான்.
87
   
                       வேறு.
   
  காரணங் கேட்டி யாயிற் கழறுவல் கனன்றி டாதி
ஆரணப் பயனுட் கொள்ளா தருண்மொழி யலப்பிக் கூறி
மாரணத் தொடரி னீங்கா வாக்குவல் லவனென் றுன்னைப்
பூரண மாகத் தேர்ந்தேன் புரைபடு புன்மைச் சொல்லால்.
88
   
  மருட்படு மனத்தோய் ஞான வரம்பிக வாது செல்ல
அருட்பயன் யாண்டும் வேண்டு மாரணம் பயின்று கூறும்
பொருட்பய னடையாச் சொல்லின் போதமெத் துணைய வேனும்
இருட்படுத் திடுமீ தன்றி யீடேற்ற மியையுங் கொல்லோ.
89
   
  அய்யகோ சொல்லிச் செய்யா வழிமதி படைத்தோய் நின்னை
மையறு தேவ பத்தி வாய்மொழி வகுக்கும் போதே
செய்யுறு கருமம் யாவுந் தீமையைத் தெரிக்கு மென்னா
வையக மிகழ்ந்து பேசும் வசைசெவி மடுக்காய் போலும்.
90
   
  கள்ளுண்டு களித்தி புந்தி காமியாய்ப் பரத்தை போகத்
தள்ளுண்டு கழித்தி வாணா ளறனிலாப் பொருளை நச்சி
எள்ளுண்டு தினம்பொய் யாணை யெத்தனை யிடுதி பேயால்
நள்ளுண்டு கெடுதி யின்னு நவிலுதி நாவிற் பத்தி.
91
   
  பத்தருக் கொருவா நட்டம் பவித்திர ராய ஜீவன்
முத்தருக் கிலச்சை ரக்ஷை முயலுவர்ர்க் கொருத டுக்கல்
இத்தனை கேட்டுக் கெல்லா மேழைநீ மருட்டிக் காட்டுங்
குத்திர பத்தி யென்று காரணங் கூறக் கேட்டேன்.
92
   
 

சொந்தநா யாகனை நீத்துச் சோரநா யகனைப் புல்லிச்
சந்ததங் குலத்து நிந்தை சமைத்திடு மகளி ரேபோல்
வெந்தொழில் விழும நச்சி வேதியர் குழாத்துக் கெல்லாம்
நிந்தனை பெருக்கி யான்ம நேசரை யகத்து நீத்தி.

93