பக்கம் எண் :

340

 

புளதிசன் மார்க்க மாய பொதுவிதி யநுட்டித் தீண்டு
மனிதஜீ வரையீ டேற்ற வந்தசற் குருவைப் போற்றிக்
கனிதரு மன்பி னன்மை கடைப்பிடித் திடுதி யாயின்
இனிதுறப் பயன்ப டுங்கா ணேழைநீ யெடுத்த ஜென்மம்.

94
   
  சிற்றறி வுடைய னேனுஞ் செப்புரை யெனதன் றெல்லாம்
முற்றறி கடவுட் சொல்லே மொழிந்தனன் முனிவா யல்லை
இற்றிதே யிரக்ஷைக் கால மேன்றசத் தியத்தை யுள்ளி
நற்றிற நாடி யுய்தி யென்றன னன்னி தானி.
95
   
  தீர்க்கன்மெய் வாய்மை கேட்டுத் தெருண்டில னலப்பன் சிந்தை
ஊர்க்கதை கேட்டுத் தேரா தொல்லைநீ நடுத்தீர்க் கின்றாய்
ஆர்க்கிது பொருந்து நட்புக் கருகனீ யலையென் மேன்மை
பார்க்கலை போதி யென்னாப் பன்னியே கினன்றன் பாட்டில்.
96
   
  புலப்படு மாறு கொள்ளாப் பொறியிலி யகத்துப் பொங்கி
அலப்பியாங் ககன்ற காலை யாரணக் கிழவன் கிட்டிச்
சொலப்படு முண்மை யாவுந் துணிந்துவற் புறுத்திப் பேசிப்
பலப்பட முயன்றாய் நம்மேற் பாரித்த கடமை யீதால்.
97
   
 

ஐயநீ சொற்ற வாறே யருள்வழிப் பட்டோர் யாருங்
கையரைக் கடிந்து கூறித் தெருட்டுதல் கடனாக் கொள்ளில்
துய்யராய்த் திகழ்வ ரன்றேற் சுடுநெருப் பிவர்நட் பென்னா
மையறத் தெருண்டு தாமே விலகுவர் வாதொன் றின்றி.

98
   
  எவ்வமி லுனது சிந்தை யெண்ணினுக் கிகல லப்பன்
வெவ்விய நடையும் பேச்சும் விரோதமா மறிதி யென்னா
அவ்வயி னுரைத்தே னேர்ந்த தறிந்தனை யைய வொன்றைச்
செவ்விதி னறிந்து தீர்தல் சீரிதென் றுரைப்பர் செய்யோர்.
99
   
  தன்னடை யிகவா னாய சழக்கனோ டுறவு பூண்டு
பின்னடை பிறழ்ந்து சிந்தை பிணக்குண்டு பிரிந்து போதல்
நன்னடை யன்றின் னேயே நழுவிய செவ்வி நன்றாந்
நுன்னடை யவரை முற்றுந் துறத்தியென் றுரைக்கும் வேதம்.
100
   
  என்றின மறைவ லாளன் மகிழ்ந்துள மெடுத்துப் பேச
நன்றறி நிதானி யைய நவிற்றிய வுண்மை காத்துப்
புன்றொழி லிகந்து நன்மை புரிவனேற் கதிபுக் குய்வன்
அன்றெனிற் குற்ற மெல்லா மவனதே யென்தன் றென்றான்.
101
 
                 அலப்பனை வரைந்த படலம் முற்றிற்று.