பக்கம் எண் :

341

 
ஞானாசிரியனைக் கண்ணுற்ற படலம்
 
   
 

இனிது நூனெறி கடைப்பிடித் திருவரு மெழில்கூர்
புனித ஜீவிய மார்க்கசம் பாஷணை பொருந்தித்
துனித விர்ந்தரோ காடவி வழிக்கொடு தொடர்ந்து
தனித மாரருட் பலநுகர்ந் திறுதியைச் சார்ந்தார்.

1
   
  ஆயி டைச்சுவி சேஷனா மருண்மறைக் குரவன்
சேய பங்கயத் திருமுகந் திகழ்ந்திடத் தோன்றி
நாய கன்பெயர் வழுத்தியா சிகள்பல நவிலத்
தாயெ திர்ந்தவான் கன்றெனத் தனித்தனி மகிழ்ந்தே.
2
   
  அன்பி னஞ்சலி பன்முறை யளித்தன ரகங்கொண்
டென்பு நெக்குநன் றறிமொழி யினியன விசைத்தார்
வன்ப கைப்புலங் கடத்திமெய் வழிப்படுத் துயர்பேர்
இன்ப ஜீவனுக் கீட்டிய துள்ளியேத் தெடுத்தார்.
3
   
  எந்தை நிற்பிரிந் திந்நெறி யெதிர்ந்ததற் கிடையே
வந்த விக்கின மிதுவிது மற்றவை தணந்த
விந்தை யீதிது வென்றெடுத் தியாவையும் விதந்தார்
அந்த ணாளனு மினிதுகேட் டருண்மொழி வகுப்பான்.
4
   
  காதன் மைந்தன்மீர் நும்பல வீனத்துக் கதித்து
மீது மீதுற்ற விபத்தெலா மொருந்கற வெருட்டி
மேதக ஜெயங் கொண்டனிர் மிகமகிழ் சிறந்தேன்
மாத யாபரன் வரம்பில்பே ரருட்டிறன் வழுத்தி.
5
   
  வித்தி னேனவை சேர்த்தனிர் விழுப்பய னருந்தி
இத்தி றத்திரு வேமுமொன் றித்திருந் தேமுற்
றொத்து ளங்களித் தோகையுற் றிடவுறு மொருநாள்
எய்த்தி டாதுயி ரிறுதிமட் டுஞற்றிநின் றிடுமின்.
6
   
  ஏசு நாயகன் றிருக்கரத் திரவியே யென்னத்
தேசு மல்கிய வழிவிலா ஜீவகி ரீடம்
மாச றத்திகழ் கின்றன காணுமின் மக்காள்
பேசி னும்பொருட் டாயதோ ரெட்டுணை பிசகா.
7