பக்கம் எண் :

342

  முளைத்த காதலின் வெதுப்புறீஇ முனம்பல ரோடித்
தளைத்த பாசத்தின் பிணிப்பினா லிடைக்கிடை தடுக்கிக்
களைத்து வீழ்ந்துயர் கதியிழந் தனரிது கருதி
இளைத்து நின்றிடா தோடுமின் றளைப்பன வெறிந்தே.

8
   
  அலகை யோச்சுதீக் குண்டினுக் ககப்படா தின்னும்
விலகி னீரலீர் வெங்கொடு வினைப்பகை வெறுத்துக்
கலக மிட்டுடற் குருதிநீர் கவிழ்தரக் கறுவி
உலகி டைச்சம ராடலீ ரின்றுகா றுரவீர்.
9
   
  விட்பு லத்தர சுரிமையை விழைந்தமெய் நோக்கந்
திட்ப மாகுக சிந்தனை மயலறத் தெருண்டு
கட்பு லப்படாப் பரமகா ரியங்களைக் கருதி
நட்பு ளீர்விசு வாசத்தி னனியுரத் திடுமின்.
10
   
  விஞ்ச மேல்வரு சோதனை யெவற்றினும் விரிந்த
நெஞ்ச மும்மத னிச்சையு நிகழ்த்துதற் கரிய
வஞ்ச கக்கொடும் பகைமையா மாதலின் மக்காள்
செஞ்செ வேதெரிந் தகற்றுமின் மற்றதன் றிருக்கை.
11
   
 

எட்ப குப்பன சிறுமைய தாயினு மென்றும்
உட்ப கைத்திறத் துள்ளதாங் கேடென வுரைக்கும்
ஒட்ப நூன்மதி யுட்கொளீஇ யொல்லையி னூன்றிக்
கொட்பு றும்புலப் பகைதெறிற் கொற்றமுற் றிடுவீர்.

12
   
  ஊன்ப ழுத்தபூ மாயமொன் றானுமுள் ளுறாமே
நோன்பு பற்றிமுப் பகைத்திற மிருக்குமி னோன்பால்
வான்பு லிப்படும் வல்லமை யாவுநும் வசத்தாங்
கோன்பு கன்றமெய் வாக்கிது நெஞ்சகங் கொண்மின்.
13
   
  இன்னு மெம்வழிக் கெதிருறும் விக்கின மெவைமற்
றன்ன வற்றைமேற் கொள்ளுமா றெவன்வகுத் தறியப்
பன்னு கென்றிரே லருண்மறை பரமராஜ் ஜியந்தான்
இன்ன லூடறுத் தேகுவார்க் கெய்துமென் றிசைக்கும்.
14
   
  ஐய மின்றுமக் கெதிர்ப்படு நகர்தொறு மகோர
வெய்ய தீச்சிறை விலங்குபல் விக்கினம் விரவி
மையி ருட்படு மலையெனத் தொடர்ந்தெதிர் மலையும்
நொய்ய தித்துணை யடைந்தவை வருவன நுனிக்கின.
15