பக்கம் எண் :

343

  கைய கன்றனிர் கானகந் துருவிமேற் கடல்சூழ்
வைய கத்துமா யாபுரி நகரிடை மறிந்து
வெய்ய கானவர் வலைப்படு மானென வெருண்டு
பொய்ய ரீட்டுவெங் கொடுமையிற் புன்கணுற் றிடுவீர்.

16
   
  ஆற லைத்துமை யடித்தப ராதரென் றதட்டிக்
கோற லைத்துணிந் தாக்குவர் கொடுஞ்சிறைப் புறத்தில்
மாற லைத்துறும் வம்பர்பொய் வாய்மையி னீதிக்
கூற லைத்தவன் முன்றிலி னிறுத்துவர் கொடியோர்.
17
   
  மம்ம ரில்விசு வாசத்தின் வலியசான் றாக
நும்மி லேயொரு வன்கதி கூடுவ னுதலிற்
செம்மை யுத்தம ராயிரும் ஜீவனுள் ளளவும்
நம்ம கீபதி நல்குவர் நலந்திகழ் மௌலி.
18
   
  முன்கு லாவிய நெறிப்படு மிடரெலா முயங்கிப்
பொன்கு லாநகர் புகுவதி லிடைப்படு புரைதீர்
வன்கொ லைப்படு வாதனை வரம்பறு மெனினும்
நன்க தாயசிற் சுகம்பெற லெத்தனை நன்றாம்.
19
   
  விஞ்சு பேரின்ப வீட்டுல குய்க்குமெய்ந் நெறிதான்
வஞ்ச மிக்கமா யாபுரி மறுகையூ டறுத்துச்
செஞ்செ வேசெலும் பிறிதொரு வழியிலை ஜெகத்துக்
கஞ்சி யோடுவ தெங்ஞன மாக்கையுள் ளளவும்
20
   
  தம்ப லக்குறை யுணர்ந்தருட் பலத்தையே சார்ந்திங்
கும்பர் நூனெறி யொழுகியோர்க் குறுபெறுந் துன்பம்
வெம்பு தீயேன முருக்கினு முன்னின்று விலக்கி
நம்பன் வானநாட் டுயர்பத நல்குவர் நமர்காள்.
21
   
  துன்பம் யாவையு மொருங்கறத் துடைப்பினுந் துடைப்பர்
அன்பின் மெய்விசு வாசத்தை யவனியிற் றெரிக்க
வன்ப கைப்புலத் தடியரை மடிப்பினு மடிப்பர்
என்பு ரிந்தென ரெம்பிரான் யாவுநன் றெமக்கே.
22
   
 

பந்த நீங்குமுப் பகையறும் பாவசங் கடங்கள்
நந்து மெவ்வகை நலிவுமின் றுயர்கதி நன்மை
முந்து மாரண சாக்ஷியா முடுகியா ருயிரைச்
சிந்து தீரருக் குறுநலஞ் செப்புமா றரிதே.

23