|
இடைவி
டாதுமெய் வேதிய ரிருவரு மிணங்கி
நடைவ ழிப்படூஉ நயந்துசின் னாளினி னலங்கூர்
அடவி நீத்துவந் தலகைதொக் கறங்குடி போய
புடவி நச்சுமா யாபுரிப் புரிசைகண் ணுற்றார்.
|
32 |
|
|
|
|
ஞானாசிரியனைக்
கண்ணுற்ற படலம் முற்றிற்று. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
அரிய
நூனெறி கடைப்பிடித் தாரணக் கிழவன்
பரிய கானகந் துருவிவந் திறுத்தமை பகர்ந்தாம்
விரியுந் தீவினைக் குறையுளாய் விளங்கிய மாயா
புரியின் பான்மையுங் கோன்மையும் வகுத்தினிப் புகல்வாம்.
|
1 |
|
|
|
|
இஞ்சி
தோன்றலு நிதானியென் றிசைபெறு மேந்தல்
அஞ்ச லித்துநின் றையநின் னனுபவத் தாய்ந்த
வஞ்ச மிக்கமா யாபுரி மரபுரைக் கென்னாச்
செஞ்சொ லாரண னன்றென வினையன தெரிப்பான்.
|
2 |
|
|
|
|
தொன்று
தொல்லறந் துதைந்தெழில் குலவிய தூய
மன்று தொக்கபல் வளனெலாங் கரவினால் வௌவிக்
கன்று வெஞ்சினத் தலகைதன் கவிகையைக் கவித்தான்
அன்று தொட்டுமா யாபுரி யாயதிவ் வகிலம்.
|
3 |
|
|
|
|
தூய
நன்மையுஞ் சுகிர்தமு மொருந்கறத் துடைத்து
மாயி ரும்புவி முழுவதுந் தனதென வளைத்த
பேய னேபகைத் தவித்தையாம் பிறங்கலை யடுக்கி
மீயு யர்ந்தவான் கடிமதி லிட்டனன் மேனாள்.
|
4
|
|
|
|
|
மேனி
வந்தெழு மௌட்டியப் புரிசையின் விரகால்
ஞான பானுவின் கதிரொடு நற்கலை மதிதோய்
தூன லந்திகழ் சுடரொளி யகத்துறச் சுலவா
தீன மாயபுன் சமயமின் மினிகளே யியங்கும்.
|
5 |
|
|
|
|
மட்டி
லாதுயர் கடிமதில் வானுற நிவந்து
முட்டு மென்றெழின் முத்திமா நகர்வெளி முகட்டிற்
கெட்டி நிற்குமற் றகழிவாய் திறந்திரு ணிரையந்
தொட்டு நிற்குமீ தன்றிவே றுளகொலோ சூழ்ச்சி. |
6
|