பக்கம் எண் :

346

  கடிம திற்புறத் தகழிநீர் நிலையெனக் கருதி
நொடிவ ரன்றது மாயமாக் காரிரு ணுதலிப்
படியும் வானமும் வாய்மடுத் தோருழைப் பதுங்கிக்
குடிகொ ளுந்திரு வரங்கமே யதனிலை குணிக்கின்.
7
 
  சஞ்ச லஞ்செறி நிறையபா தலங்கொலோ சமைந்த
பஞ்ச பாதகப் படுகரோ பாரகம் பொதிந்த
வஞ்ச மல்குகா ராழியோ மதிற்புறம் வளைத்த
எஞ்சு றாததொல் லகழிமற் றியாதென விசைப்பாம்.
8
 
  குருசு யர்த்தபெம் மானடிக் கன்புசெய் குநர்தம்
பரிசி கழ்ந்தவ தூறுசெய் பாமரர் படர்ந்த
எரிசு லாநர கத்துநின் றேறினு மேறார்
புரிசை முற்றுபே ரகழியி னிடறிவீழ் புவியோர்.
9
 
  பண்டு கேடுசூழ் கொடுவிடப் பாந்தள்வாய் முழையோ
கொண்ட மார்க்கரை விழுங்குதீக் கும்பியின் குகையோ
மண்டு நித்திய மரணத்தின் மதகரோ வலகைத்
தொண்டை தான்கொலோ வாயிலையென்னென்த் துணிகேன்.
10
 
  கேட்டி னுக்கெலா மொருகுரு பீடமாய்க் கெழுமி
மேட்டி மைத்திட ராயகோ புரநிரை வியன்பொற்
கோட்டி மாசலக் குடுமியிற் கோநகர்ப் புரிசைக்
கேட்டு வாயிலிற் றிகழ்வன திசைதிசை கெருவி.
11
 
  ஊழி னாமென வுரப்பியோர் மடமையி னோங்கிப்
பாழி யம்பகு வாய்தொறுந் திகழுமுப் பரிகை
ஆழி பொங்கிமே லிடினிறு வாமென வஞ்சிப்
பூழி மானிடஞ் சமைத்தகோ புரமெனப் பொலிவ.
12
 
  வன்மை மல்குமூ தெயிற்றலை வாயில்க டோறும்
புன்மை மல்கிய பேதைமைப் பொறிகளே பொதுளித்
தின்மை யாவையும் விருப்பொடந் நகரிடைச் செறித்து
நன்மை யாவையும் புறப்பட நலிந்தெறிந் திடுமால்.
13
 
  மரண கண்ணிகள் வீசுதந் திரவலை மாயா
கரண வேதிகள் பாசங்க ளினையன கஞலி
முரணி வேதியர் குழுக்களை முருக்கியந் திரங்கள்
அரண வாயிலி னமைந்தெதி ரடர்ப்பன வனந்தம்.
14