பக்கம் எண் :

347

  மாய முற்றிய ஞானசூ னியமதிள் மலிந்த
தீய யந்திரத் திரள்கொலோ திசைதிசை செறிந்து
பேயும் பூதமுங் காளியுங் கூளியும் பிளிறி
ஆயி ரங்களாப் படையெடுத் தருங்கடி யமையும்.

15
   
  மோக மல்குமா யாபுரி மூதெயின் முயங்கும்
வாகை நீள்கொடிக் குலங்கள்விண் டுயல்வரு மரபு
மாகம் வேட்டுழன் மதியிலீர் வரம்பில்சிற் றின்ப
போக முண்டிவண் வம்மினென் றழைப்பது போலும்.
16
   
  உரவு நீர்நிலத் தலகைமா னிடருர மொருங்கே
கரவின் வௌவினேங் காசினி முழுவதுங் ககனத்
திரவி மண்டிலங் காறுமெம் மாளுகை யெம்மைப்
பரவு கென்றெயி லுயர்த்திய பதாகைவிண் படர்வ.
17
   
  இகழு மாறெரி கோமதி லிடிந்ததற் கிசையத்
திகழு மெய்ச்சுரு தித்தொனி திசைதிசை முழங்கின்
அகழி சுற்றுமிவ் வாணிலை குலையுநம் மவர்தம்
பகழி யாதிய படைக்கலம் பாழ்படுத் தாவால்.
18
   
  தீவி னைக்கொரு களஞ்சியந் தீக்குண மன்றம்
பூவி னுக்கநு போகமா ளிகைபுலை புரக்குங்
கோவி னுக்கர சிருக்கைமாந் தருக்கொரு கொப்பம்
ஜீவ னுக்கெலாங் கேடுமா யாபுரிச் சிறையே.
19
   
  பாத கத்தொழில் பயிலிடம் பாதலம் புகுத்தும்
வேத னைப்பயிர் விளைபுலம் வியன்பிர பஞ்சச்
சாத கத்திரள் குழுமிய தனிப்பெருங் கோட்டஞ்
சோத னைப்படு கிடங்குமா யாபுரிச் சூழல்.
20
   
  உலக மாயவர்த் தகம்புரி யொருபெருஞ் சந்தை
கலக வாள்விழிக் கணிகையர் காமியக் கோட்டி
அலகி லாதபொய்த் தேவருக் காலய மழிம்பற்
கிலகு கின்றமா யாபுரி யிருதயத் தானம்.
21
   
  நாச தேசமென் றிசைபெறு நானிலக் கிழத்தி
நீச மான்மதி வதனமோ நினைவினைக் கவரும்
மோச வாள்விழி யோதட மார்பிடை முயங்குங்
காசி னாரமோ வென்கொல்மா யாபுரி கருதின்.
22