பக்கம் எண் :

348

  பரிசி லாதுய ரிதயமா ளிகைதொறும் பயிலும்
வரிசை தப்பிய மன்னர சிருக்கையு மன்றும்
எரிசு லாமநி யாயஞ்செய் கோட்டியு மீனப்
புரிசை முற்றிய கோபுர நிரைகளும் பொலியும்.

23
   
  தீமை மல்கிய ஜெயக்கொடி வானுறத் திகழுங்
காமி யச்சுவை பகுத்திடு முழவொலி கறங்கும்
பாம ரக்குழு வேயன வரதமும் பயிலுஞ்
சாமி யைப்புறக் கணித்திடு தவநெறி தழைக்கும்.
24
   
  கடிம ணப்பறை பிணப்பறை விழாப்பறை கறங்கக்
கொடிப டும்பொரு களப்பறை வயின்றொறுங் குளிறப்
படிபு ரந்தருள் வளந்தரு பைம்புயன் முழக்கத்
திடியின் சும்மையைச் செவிமடா திந்நக ரென்றும்.
25
   
  தெருவி னொன்றுபன் னூறெனுங் குறுந்தெருத் திரிய
மருவு மந்நகர் மாந்தரே வழிமயங் கிடுவர்
பொருவ ருங்கலை கற்பினும் பொருணிலை குறிக்கொண்
டொருவ ழிப்படா துழன்றிடு முள்ளமே போல.
26
   
  மேதி னிப்படு தேசங்கள் வியன்மறு காகக்
கோது மல்குபன் மதங்களே குறுந்தெரு வாக
ஜாதி பேதங்க ளேபல சந்துக ளாகத்
தீது துற்றுமா யாபுரி புகுந்தன தெரிக்கின்.
27
   
  நான மைவகைத் திரவிய முப்பழ நறைசெந்
தேனு லாநறு மலர்க்குவை மயிலினஞ் செறிந்து
மேனி வந்துபல் கொடிவிராய் வெண்சுதை மாடம்
பானி லாத்தவழ் கிரியெனப் பொலிகின்ற பலவே.
28
   
  உருக்க வின்பெறக் கைபுனைந் துண்மையை யொருவித்
திருக்கு லாவியுள் ளகம்புறங் கொடுவினை திருந்திப்
பெருக்க மாயடாம் பீகத்துப் பிணிப்புறும் பிணக்கர்
செருக்கி னோங்கிய மாடங்க ளளப்பில திகழ்வ.
29
   
  கேடு சாலுமிவ் வுலககோ லாகலங் கெழுமி
மாட மாளிகை கூடகோ புரம்பொது மன்றம்
மேடை மேனிலை யரமியத் தலமென விரவிப்
பீடு சாலுருப் பெற்றன வோவெனப் பிறங்கும்.
30