|
அவ்வி
யத்தினா ணவச்சுவ ரமைத்தகங் கெழீஇய
தெவ்வின் வன்றுலாங் கிடத்திவச் சிரத்தகால் செறிந்து
வெவ்வி யற்படு மேனிலை திருத்திவெள் ளொளிகால்
செவ்வி யாக்கிய மாளிகை வயின்றொறுந் திகழ்வ.
|
31 |
|
|
|
|
கோது
மல்குமா யாபுரி நகரிடைக் குழுமி
ஒத ரும்பல பாக்கங்க ளுள்ளன வவற்றில்
ஆதி யாயது மரும்பொருள் சுரப்பது மங்கங்
கேதி லார்விழைந் திடுவது மிந்தியப் பாக்கம்.
|
32 |
|
|
|
|
குன்றி
டாதுயர் கல்வியுங் கொழுநிதிக் குவையும்
மன்று தொக்கவை வகைத்திர வியங்களு மலிந்து
தொன்று தொட்டுல வாநில வளங்களுந் துதைந்தே
பொன்றி ணிந்தபொற் பேழையிற் பொலியுமற் றதுவே.
|
33 |
|
|
|
|
நாலு
வேதமா றங்கம்பன் னெண்புரா ணங்கள்
கோலு மூவிரு சமயங்கள் குலவுமுத் தேவர்
சீல மார்பதி னெண்புலப் பாடைகள் செருமிப்
போலி மாந்தரை மருட்டுவ விடந்தொறும் பொதுளி.
|
34 |
|
|
|
|
வாயி
லங்கிருண் மறைத்தொனி மார்புநூல் குசைப்புல்
தீயி லங்குபல் வேதிகை திருத்துழாய் மாடம்
மீயி லங்குபல் குலக்குறி புண்டர விதங்கள்
ஆயி லங்கிய பார்ப்பனச் சேரிக ளனந்தம்.
|
35 |
|
|
|
|
மன்னர்
தொல்குலத் தவரென வறும்பெயர் மேன்மை
பன்னி வன்மனஞ் செருக்கிவெம் படைத்தொழில் பயின்று
துன்னு மிந்நக ரிடைக்கிடை தொடுத்தினி திருந்த
வன்ன மேனிலை மாடங்க ளளப்பில மலிவ.
|
36 |
|
|
|
|
ஒன்றி
னூதிய மொன்பதாக் கொண்டுவிற் றோம்பி
நன்று தீதுநா டாதொரு காசுக்கு நஞ்சு
தின்று நீணிதி செருக்கிய வைசியர் செறிந்த
பொன்ற ழைத்தமா ளிகைநிரை கோடியாப் பொலிவ.
|
37 |
|
|
|
|
எண்டி
சாமுகத் திசைபட வர்த்தக மியற்றி
மண்டு காமியச் சுவைபடு மாயமாச் சரக்குக்
கொண்டு கட்டிவிற் றூதியக் கொள்ளைகொள் வணிகர்
பண்ட சாலைக டுறைதொறும் பெருவளம் படைப்ப.
|
38
|