பக்கம் எண் :

350

  அங்கண் மாநிலந் திருத்தியூண் விளைத்தன வரதந்
தங்கள் காரிய துரந்தர ராக்குடி தழைப்பக்
கங்கை யின்குலத் துதித்தபூ வைசியராங் கபட்டு
வெங்க ணாளர்தம் மேனிலை மறுகெங்கு மிளிர்வ.

39
   
  முந்து முக்குலத் தவர்பணித் திடுதொழின் முழுதுஞ்
சந்த தம்புரி தந்துதந் தங்குல தெய்வம்
அந்த ணாளரென் றஞ்சலி யாக்கியு மடங்கிச்
சிந்தை கன்றிய சதுர்த்தர்வாழ் மனைகளுந் திகழும்.
40
   
  கைத்தொ ழிற்படு மாடகூ டங்களுங் கவினி
மொய்த்த யந்திர சாலையு முறைநெறி பிறழ
வைத்த நாடக சாலையும் பொதுப்படு மன்றுங்
குத்தி ரத்தொடு பயில்வன நகரிடைக் குழுமி.
41
   
  இழிகு லத்தரென் றேனையர் புறக்கணித் திகழுங்
கழிம டக்குடி யாளர்தஞ் சிந்தனை கன்றி
வழிவ ழிப்பகை கொண்டுவாழ் மனைச்சிறு குடிசை
பொழிலி டம்பெறு புறநக ரெங்ணும் பொலியும்.
42
   
  திங்க ளைக்கரி தாக்குவ செழுஞ்சுதைப் பித்தி
கங்கு லைப்பக லாக்குவ கணிகையர் கழகம்
மங்கு லைச்சிறி தாக்குவ மலிபுகைப் படலந்
தங்க ளைக்குரு டாக்குவ ரிந்தியத் தருக்கர்.
43
   
  இருள்ப டும்மரச் சோலையு மிருதயக் குகையும்
மருள்ப டுங்களி விழிகளு மதத்தநூன் மரபுந்
தெருள்ப டும்புவிக் கலைகளுங் கலவியின் றிருக்குஞ்
சுருள்ப டுங்குல மலர்களுந் துத்துவெள் ளடையும்.

44
   
  கண்ணி குத்றுவர் காமுகப் புள்ளினைப் படுப்பான்
வண்ண வாள்விழிப் பரத்தையர் மறுகெங்கு மருட்டி
நண்ணி யெத்துவர் மனைதொறு நயப்புரை பேசிப்
பொண்ணொ ழுக்கறு மாதரைக் காமப்பேய் பிடித்தோர்.
45
   
  அங்க மாமத வாரணத் தொனிபடு மல்லால்
அங்க மாமத வாரணத் தொனிபடா தாக
எங்கு மில்லொழுக் கிகந்தன வென்பதை யல்லால்
எங்கு மில்லொழுக் கிகந்தன விலையென லிலையால்.
46