(விசேடவுரை)
முந்திய பாட்டில் ஐரோப்பிய ஸ்திரீகளை
அன்னப் பட்சிகளாகக் கூறியவர் இப்பாட்டில் சுதேச ஸ்திரீகளை மயிற்
பட்சிகளாகக் கூறினார். கடைசியடியில், 'நாகம் மாயுமே,' 'நாகம் ஆயுமே'
என்று பிரித்துப் பொருள் கொள்க. முதல் நாகம் சர்ப்பம். இரண்டாம்
நாகம் அமார். இதுமுதல் ஐந்து கவிகள் சிலேடை. ஒரே சொற்றொடர்
வெவ்வேறு விதமாய்ப் பிரிந்து வெவ்வேறு அர்த்தங்கொடுப்பது சிலேஷை.
|
ஆத பன்கதி ரலருங் காலையில்
மாதர் வாண்முக வாரி சங்களும்
சீத வாவியின் செய்ய பங்கயப்
போத லர்ந்திடும் போத லர்ந்திடும். 23
|
(பொ
- ரை) குளிர்ந்த தடாகங்களில் செந்தாமரைப் புஷ்பங்கள்
விரிகின்ற பிராதக்காலத்தில் நீதியின் சூரிய கிரணம் விளங்குகின்ற
காலையில் (காலையாராதனைக்குக் கூடுகின்ற) ஸ்திரீகளின்
பக்திவிளங்கும் முகத் தாமரைகளும் மலர்ந்து விளங்கும்.
|
இன்ன லுற்றவர்க் கிரங்கி யாண்டுமெய்
நன்னர் வாசக நவிற்றி யாதரித்
துன்ன ருங்குணத் துதவி செய்திடும்
அந்ந லாரெலா மந்த லார்களே. 24
|
(பொ
- ரை) துன்பத்தை நுகருகின்ற வறியவருக்கு இரங்கி,
அவர்களிடத்து எப்பொழுதும் உண்மையான நல்ல வசனங்களைக்கூறி
ஆதரவு செய்து, நினைத்தற்கரிய, நற்குணத்தோடு உபகாரஞ்செய்கின்ற
அந்த நல்லவர்களெல்லாரும் அத்திருநாட்டில் வாசஞ்செய்யும்
உத்தமகுணப் பெண்டீர்கள்தாம்.
|
மாரி சங்களை மாத வத்தரும்
நாரி சங்கமு நண்ணி யங்கிரு
பாரி சங்களும் படியுங் கான்முக
வாரி சங்குலாம் வாரி சங்கமே. 25
|
(பொ
- ரை) களங்கமற்ற மனசோடு பக்திசெய்கின்ற
திருத்தொண்டரும் மாதர்கூட்டமும் ஜீவ ஊற்றண்டையடுத்து இருகரை
மருங்கும் படியும்போது அவர்களுடைய முகபத்மங்கள் விளங்கிய
ஜீவநீர்நிலைகள் அந்நாட்டில் சங்கம் என்று சொல்லத்
தக்கனவாயிருக்கும்.
(விசேடவுரை)
படியுங்காலென்பதை நீர் நிலையில் நீராடுதலாகவும்
தேவாலயத்தில் வணங்குதலாகவும் கொள்க. சங்கம் என்பது கோடா
கோடி,
|
மரும லிந்தபூம் பொழிலின் மைந்தர்தாம்
திரும லிந்தமங் கையர்சி றாரொடும்
நிரும லாதிபன் பணிசெய் நித்திய
கருமஞ் சாலுமே கருமஞ் சாலுமே. 26
|
|