|
மாணுடை
யுணவு பான வருக்கமஞ் சனஞ்சு கந்தம்
பூணணி கலங்கர்ப் பூரப் புதுநறுங் கலவை மென்பூக்
காணநெஞ் சிவருங் காட்சிக் கருப்பொருள் பலவு மீட்டி
நீணகர்க் குதவி யென்று நிறைவளம் படுக்கு மாதோ.
|
71 |
|
|
|
|
வரைகட
னகர நாடு வனம்படு மமுதத் தோடு
குரைகடற் புவியின் மேய கொழுநிதிக் குவையும் விண்மீன்
புரைநவ மணியி னாய பொற்குவை பலவும் பொங்கி
நிரைநிரை பொலிய வெங்கு நிருத்தனம் பயிலு மாயம்.
|
72 |
|
|
|
|
அகத்திரு
ளிரிக்கு மன்றோ வவிராளித் தீபம் யாண்டுந்
தொகுத்தபன் மணிமுத் தம்பொன் சுடர்விரி வைர மாதி
மகத்தொளி விளைக்க நாளு மாயவர்த் தகஞ்செய் மாந்தர்
அகத்திருண் மலியு மல்லா லகல்கில திதுவே யாக்கம்.
|
73 |
|
|
|
|
பல்வளங்
கெழுமு நானா தேசத்தும் பயின்றங் குள்ள
நல்வள மொருவி ஜீவ நாசத்தை மலியக் கொண்டு
சொல்வளம் பெருக்கி விற்றுச் சூனியப் பொருளை யாக்கிக்
கொல்வளம் படுக்கு மாயக் குத்திரங் குலவுஞ் சந்தை.
|
74
|
|
|
|
|
அங்கிலோ
தேசத் துள்ள வரும்புரு ஷார்த்தங் கொள்ளார்
பொங்குடாம் பீகம் வன்கண் பொருளீட்டு தந்தி ரங்கள்
வெங்குடி கேடென் றாய விநாசத்தை விலைப்பா லீட்டிச்
சங்கடம் பகரு மாயச் சந்தையி னமலைத் தெங்கும்.
|
75 |
|
|
|
|
மாயிரு
ஞாலத் துள்ள வரம்பிறீக் குணங்க ளெல்லாந்
தீயசிற் றின்ப போகச் செவ்வியா யுருவு வாய்ந்து
மேயவிவ் வுண்மை தேரார் விழிமருண் டெளிதிற் றுய்ப்பர்
தூயஜீ வியத்தை நல்கிச் சுடர்விழு பதங்க மேபோல்.
|
76 |
|
|
|
|
பாரீச
னாகக் காட்டும் பாதகப் பசாச னுய்த்த
மாரீசக் கடையின் சால வஞ்சவின் பத்தை நச்சி
நேரீசற் குழுவின் மொய்த்து நிலவுல கத்து மாந்தர்
ஒரீஷத் துணர்வற் றான்ம வூதிய மிழப்ப ரந்தோ.
|
77 |
|
|
|
|
ஆரணங்
காட்ட நாடி யகங்குழைந் திருப்பார் யாண்டும்
ஆரணங் காட்ட நாடி யகங்குழைந் திருப்பா ரில்லர்
தாரணி தந்த ஞானச் சனியனைப் பணிவார் யாண்டுந்
தாரணி தந்த ஞான தம்பிராற் பணிவா ரில்லர்.
|
78 |