பக்கம் எண் :

355

  மறங்கடைப் பிடித்து நின்ற வன்கணார் மறுமை நோக்கி
அறங்கடைப் பிடியா ரென்னோ வழிமதி படைத்து மாயம்
பிறங்கிய மறுகு லாவிப் பேதுற்று வறிது மாள்வர்
கறங்கிசை யவாவி மாயுங் கேகயங் கடுப்ப மன்னோ.

79
   
  தெருட்கடல் படியாச் சிந்தை தீவினைக் கடற்கு ளுய்ப்ப
அருட்கடல் படியா ராகி யாசையங் கடற்குண் மூழ்கி
இருட்கடல் படுவ ரந்தோ விந்நக ரத்து மாக்கள்
மருட்கட லிகந்தா னந்த மாக்கடல் குளிப்ப தென்றோ.
80
   
                 வேறு.
   
  நித்திய லம்பவ ளஞ்செறி நீர்மையின்
பத்தி யாய்த்திரை நாடிய பான்மையின்
கத்து லப்பரி தாயக ணக்கினில்
தத்து நீர்க்கட லொக்குமச் சந்தையே.
81
   
  படம்வி ரித்துப் பஃறலை தோய்ந்துபே
ருடல்கி டத்தியு றுவன வாயிடூஉக்
கொடுவி டம்பொதிந் தாருயிர்க் கொள்ளைகொள்
நெடிய பாந்தளந் நீள்கடை வீதியே.
82
   
  என்றி லங்கவி லங்கெழின் வாய்நெகூஉ
மன்ற லார்ந்தளி மொய்த்தும துச்சொரிந்
தொன்று ளக்களி காட்டலி னொண்மறு
கன்ற லர்ந்தவ ருங்கடி மாலையே.
83
   
  திசைமு கந்திக ழப்பொருள் செய்தலின்
வசையின் மாயைவ ரம்பறு பான்மையின்
நசைபி றங்கமன் றாடிந் டித்தலின்
இசையு மம்மறு கிந்துமுத் தேவரை.
84
   
  மூச்சுக் காயிரம் பொய்படு முந்துபொய்ப்
பேச்சுக் காயிரம் பொன்படும் பேசும்வெள்
வீச்சுக் காயிரம் பொன்படும் வீச்சவா
யேச்சுக் காயிரம் பொன்படு மென்றுமே.
85
   
  கோடி கோடிகு விப்பன குத்திரங்
கோடி கோடிதொ குப்பன கோண்மொழி
கோடி கோடிதி ரட்டுங்கொ டுவினை
கோடி கோடிகு வைநிதிக் கொள்ளையே.
86