பக்கம் எண் :

356

  கோடி கோடிகு லப்பெரு மைகொளுங்
கோடி கோடிவெந் நோயிற்கு றைந்திடுங்
கோடி கோடியுல் லாசத்திற் கொள்ளைபோந்
தேடி வைகலுஞ் சேமித்த தீநிதி.
87
   
  கோடி கோடிகு டலிற்பு தைந்திடுங்
கோடி கோடிகு டிவெறி கொண்டிடுங்
கோடி கோடிசிற் றின்பக்கு கைபுகும்
ஓடி யாடித்தி ரட்டிய வூர்நிதி.
88
   
  ஆட ரங்கத்த ழிபபல் லாயிரம்
பாட ரங்கம்ப றிக்கும்பல் லாயிரங்
கூட ரங்கங்கு றைக்கும்பல் லாயிரங்
கேட ரங்கங்கெ டுக்கும்பல் லாயிரம்.
89
   
  கண்ட மாயக்க டையுங்க வின்கடை
தண்டு மாயச்ச ரக்குஞ்ச ரக்கினின்
மண்டு மின்பமு மாயையெ னாமதி
பண்டொர் ஞானிப கர்ந்தன னுண்மையே.
90
   
  உன்ன தானந்த வோங்கல ரசன்முன்
இந்நி லத்துவந் திவ்வழிச் செல்கையில்
மன்னு மாயவின் பத்தைவவ ரைந்துசீ
என்ன வீசிப்பு றக்கணித் தேகினார்.
91
   
  தொண்டர் பன்னொரு வோருமித் தொன்னகர்
கண்டு மாயக்க டையைக்க டிந்துமெய்
விண்டு வர்த்துயிர் வீடுமட் டாயுரங்
கொண்டு நின்றுபி ரானடி கூடினார்.
92
   
  மாய சூனிய மல்கிய விந்நகர்த்
தீய சீலந்தெ ரிப்பரி தென்னுரைக்
காயி ரம்மடங் காயறி வாயெனாத்
தூய வேதியன் சொற்றன னென்பவே.
93
   
         மாயாபுரிப் படலம் முற்றிற்று.
   
 
நகர்புகு படலம்
 
   
  நாடி யாரணன் சொற்றசொ னன்னிலை
ஆடி யின்கண லங்குமா யாபுரிப்
பாடொ ருங்குகண் டுள்ளப்ப தைப்பொடே
நீடு நீர்மைநி தானிநி கழ்த்துவான்.
1
   
  ஜீவ நாசம்வி ளைக்குமித் தீநகர்க்
காவ லன்செயல் கட்டற நீக்குதல்
தேவ சேனையர் கோனருட் செவ்வியே
பாவ காரிய ரேஞ்செயற் பாலதென்.
2
   
  அவித்தை யாயவ ரணும கத்துறக்
குவித்த மாயசிற் றின்பமுங் கோளறக்
கவித்தி டித்துக்க கோளத்த ருண்முகில்
புவித்த லத்துப்பொ ழிவதெக் காலமே.
3
   
  செவ்வ னூனெறி சேறுது மாயினும்
அவ்வ யிற்படு மாயவ ழிம்பினைக்
கௌவை யுற்றபு ரளியைக் கண்டுகேட்
டெவ்வவ ணஞ்சகித் தேகுவ தெந்தையே.
4
   
  பாவ நீதிப கர்நடுத் தீர்வையின்
ஆவ தீதென்ற றிவுகொ ளுத்துநந்
தேவ வாவிதி ருவருட் பெற்றியை
ஜீவ ருக்குத்தெ ரிப்பதன் றோகடன்.
5
   
  நாச தேசந கரியி னண்பொடு
நேச மார்சுவி சேஷநி கழ்த்திடின்
மோச நாசம்வி ளைப்பரம் மூர்க்கரேல்
ஈச னேசமீ டேற்றம ளிக்குமால்.
6
   
  சோத னைக்குள்வி ழாவகை சூழ்ச்சியோ
டாதி தேவன டிநிழ றுன்னியாங்
காத லாயெமைக் கையடை யாக்கிடிற்
போத மல்கும ருட்டுணை பூக்குமால்.
7