பக்கம் எண் :

357

  என்று ளங்குவிந் தின்னன கூறலும்
நன்று நன்றுன்க டைப்பிடி நம்பியாம்
பொன்றி னும்மிடை யூறுபொ ருந்தினும்
மன்ற னாயகன் சித்தம கோத்தமம்.

8
   
  வழும்பு பட்டநம் மாக்கையும் வல்வினைத்
தழும்பு பட்டநம் மாவியுஞ் சார்ந்தவுந்
தொழும்பு பட்டவன் றேபர மன்சுதற்
கொழுங்கு பட்டன வொப்படை யாகவே.
9
   
  நந்த மக்கரு ணாதன்க ழல்புகுஞ்
சிந்தை யேயன்றிச் சிந்தைபி றிதிலை
முந்து வெங்கொடுந் துன்பமு ருக்கினும்
இந்த வாக்கையொ டேமுடி வெய்துமால்.
10
   
  ஈறி லாப்பர லோகவி ராஜ்ஜிய
ஆறு செல்லுது மாவன வாகுக
தேறு கையவெ னாவித்தி றத்தன
கூறி னான்மறை யோன்குணக் குன்றனான்.
11
   
  இன்ன வாறுரத் தின்னுரை யாடிநம்
உன்ன தேசனொ ருதிரு வோலக்கச்
சன்னி தானத்துத் தாழ்ந்துமன் றாடியே
சென்னெ றிக்கொடு போயினர் சீரியோர்.
12
   
 

நன்று பேசிந ராத்தும ரக்ஷகன்
வென்றி யன்புவி ழுத்தவம் வித்தகம்
என்றிவ் வன்னவி சைபுனைந் தேத்தியே
சென்று கூடினர் மாயச்சி றைப்புறம்.

13
   
  ஆழி யன்னவ கழைய கப்புறஞ்
சூழு மேருவிற் றோன்றிய விஞ்சியை
ஊழி னோக்கியு யர்கடை வாயொரீஇ
வாழி யாரணர் புக்கனர் வஞ்சரூர்.
14
   
  வண்ண மேனிலை மாடங்கள் கூடங்கள்
எண்ணி றந்திரு பாலுமெ ழிறிகழ்
கண்ண கன்றக டிநகர் வீதிவாய்
நண்ணி நூனெறி நாடினர் போயினார்.
15